தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் – மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை கும்பகோணம் தாராசுரம் KSK கல்லூரியில் தொடங்கி வைத்து, வேலை கிடைக்கப்பெற்ற இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை […]
அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என ஆய்வு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் ரூ.100 கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முரளிதரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணையின்போது, அரசு பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர் கழகம் கட்டணம் தவிர்த்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தலைமை ஆசிரியர்கள் […]