கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததால்,அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் அய்யப்பன் நீக்கப்பட்டுள்ளார். மேலும்,கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி,திருமங்கலம் நகர பொறுப்பாளர் முருகன், உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் சுதந்திரம் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்
திமுக உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகிறது;அதற்கான தயாரிப்பு கூட்டம் நாளை நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் நடத்தி, அதன் முடிவுகளை அறிவிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து,சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.பின்னர், உள்ளாட்சித் தேர்தல் பணிகளை முடிக்க கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் தனி அலுவலர் […]
சட்டசபையை முழுவதுமாக புறக்கணிக்கிறோம் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் கூடிய பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும்,நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது 11-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையை வாசிக்க முன்பே தங்களுக்கு பேச அனுமதி கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால், சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டது. பின் சட்டசபை கூட்டத்தில் இருந்து திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.இதனையடுத்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் […]
திமுகவில் வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி அமைக்கப்படுகிறது என்று துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டதிட்ட விதி: 6, பிரிவு: 2-ன் அடிப்படையில் வெளிநாடு வாழ் இந்தியர்களை திராவிட முன்னேற்ற கழக உறுப்பினராக இணைப்பதற்கும் ஒவ்வொரு நாட்டிலும், திராவிட முன்னேற்ற கழக அமைப்புகளை உருவாக்குவதற்கும், முறைப்படுத்துவதற்கும் திராவிட முன்னேற்ற கழக சட்டதிட்ட விதி 31 – பிரிவு: 20-ன் கீழ், வெளிநாடு வாழ் இந்தியர் (என்.ஆர்.ஐ) […]