#BreakingNews : பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு – திமுக அறிவிப்பு

தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன் எனவும், பொருளாளர் டி.ஆர்.பாலு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த மார்ச் மாதம் திமுக பொதுச்செயலாளராக இருந்த க. அன்பழகன் காலமானார். இதனால், பொதுச்செயலாளர் பதவி காலியானது.பொதுச்செயலாளர் பதவிக்கு புதிய நபரை தேர்ந்தெடுக்கப்படும் நேரத்தில் கொரோனா, பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது.இதனால், பொதுச்செயலாளர் பதவிக்கு புதிய நபரை காலதாமதம் ஆனது. இதையடுத்து, துரைமுருகன் வகித்து வந்த பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக இரு பதவியும் காலியானது. எனவே சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் … Read more

திமுக தலைவராக 3ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முக ஸ்டாலின்.! கலைஞர் நினைவிடத்தில் மரியாதை.!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பொறுப்பை ஏற்று, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக தலைவர் முக ஸ்டாலின், கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். திமுகவின் முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு பின் அடுத்த தலைவர் யார் என்று அழகிரி மற்றும் ஸ்டாலின் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. ஆனால், கடந்த 2014- ஆம் ஆண்டு அழகிரியை கட்சியில் இருந்து நீங்கியதால், கலைஞர் மறைந்து சுமார் 20 நாட்களுக்கு பிறகு திமுக கூட்டத்தில் ஒருமனதாக … Read more

திமுக அதிருப்தியாளர்கள் பாஜக வரவேண்டும் – வி.பி.துரைசாமி

திமுக அதிருப்தியாளர்கள் பாஜக வரவேண்டும் என்று பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார். அண்மையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து வி.பி துரைசாமியை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி நீக்கம் செய்வதாக அறிவித்தார் .இதனிடையே சென்னை கமலாலயத்தில் வி.பி.துரைசாமி பாஜக மாநில தலைவர் முருகனை சந்தித்து பாஜகவில் இணைந்தார்.வி.பி துரைசாமி பாஜக மாநில துணைத்தலைவராக நியமனம் செய்வதாக தமிழக பாஜக தலைவர் முருகன் அறிவித்தார். டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்தார் திமுகவை … Read more

திமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவால், அந்த பொறுப்பு தற்போது காலியாக உள்ளது. இதனால் பொதுச் செயலாளர் பொறுப்புக்குப் போட்டியிட உள்ளதால், பொருளாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக, துரைமுருகன் தன்னிடம் கடிதம் அளித்ததாகவும், அவரின் விலகலை ஏற்றுக்கொள்வதாகவும் கடந்த மார்ச் மாதம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.  இதையயடுத்து மார்ச் 29-ம் தேதி திமுக பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கான தேர்வு நடைபெறுவதற்காக அக்கட்சியின் பொதுக்குழு … Read more

தொடரும் மோதல் ! ஆவணங்கள் எங்கே? ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி

முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடத்தின் நிலப் பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும் எங்கே என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அசுரன் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்து தனது ட்விட்டர் பக்கம் மூலமாக வாழ்த்து தெரிவித்தார்.அதில்,பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறன் &வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷுக்கு பாராட்டுகள் என்று … Read more

5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அரசாணையை உடனடியாக திரும்பப் பெறுக – மு.க.ஸ்டாலின்

தமிழக அரசு 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அரசாணையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு  அறிவிப்பு வெளியிட்டது.ஆனால் இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியுள்ளது.இந்த நிலையில் இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், தமிழக அரசு 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அரசாணையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கல்வி … Read more