முழு ஊரடங்கான நேற்றைய தினம் திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோவிலின் வளாகத்தில் ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் அரசு விதிமுறைகளை பின்பற்றி நடைப்பெற்றது. தேவநாதசுவாமி கோவில் என்பது 108வைணவ தலங்களில் ஒன்றாகும். இந்த கோவில் கடலூரில் உள்ள திருவந்திபுரத்தில் உள்ளது . இங்கு முகூர்த்த தினங்களில் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக கோவில் மூடப்பட்டுள்ள நிலையில், அதனை சுற்றியுள்ள திருமண மண்டபங்களில் அரசின் விதிமுறைகளை பின்பற்றி திருமணங்கள் நடத்தி வருகின்றனர். […]