பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இரங்கல். பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நல குறைவால் அகமதாபாத்தில் இன்று காலை காலமானார். குஜராத்தின் காந்திநகருக்கு சென்ற பிரதமர் மோடி, அவரது தாயார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதன்பின், காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது. பிரதமரின் தாயார் மறைவுக்கு குடியரசு தலைவர், எதிர்க்கட்சி தலைவர், மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள் என பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். அந்தவகையில், […]
புகழ்பெற்ற எழுத்தாளர் பாபாசாகேப் புரந்தரே மறைவால் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவு வேதனைப்படுகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி குறித்த தனது படைப்புகள் மூலமாக மிகவும் புகழ்பெற்ற மகாராஷ்டிர மாநிலத்தின் வரலாற்று ஆசிரியரும், எழுத்தாளருமானவர் தான் பாபாசாகேப் புரந்தரே. 2019 ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 99 வயதுடைய எழுத்தாளர் […]