சென்னை தாம்பரம் ப்ளூஸ்டோன் நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 16 வயது சிறுவன் கைது. சென்னை தாம்பரம் ப்ளூஸ்டோன் நகைக்கடையில், அசாமை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சிறுவன் கெளரிவாக்கத்தில் இருக்கும் ஜூஸ் கடையில் வேலை பார்த்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அச்சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் அவை அனைத்தும் மீட்கப்பட்டுள்ளது.
சென்னையில் திவான் எனும் தொழிலதிபரை கடத்திய கொள்ளையன் மற்றும் கூட்டாளி கைது. சென்னையில் மண்ணடியை சேர்ந்த தொழிலதிபர் திவான் அக்பர் என்பவர் கடந்த 17 ஆம் தேதி கடத்தப்பட்டதாக முத்தையால்பேட்டை காவல் நிலையத்தில் வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் தவ்பீக் என்பவருக்கும் திவான் அக்பருக்கும் இடையே ஹவாலா பணப் பரிமாற்ற தொழில் போட்டி நீண்ட காலமாக இருந்ததாக தெரியவந்துள்ளது. இந்த பிரச்சனையில், தவ்பீக் அவரது மனைவி மற்றும் 5 கூட்டாளிகள் தங்களை என்ஐஏ அதிகாரிகள் […]
அத்திமரப்பட்டியை சேர்ந்த ஜெயா நெற்று இரவு தூத்துகுடி சென்று வரும்போது.ஸ்பிக் நகரிலிருந்து ஜெயா இவரது தந்தையான பால்துரை உடன் டூவீலரில் வந்து கொண்டிருந்தார் . பின்னாடி மற்றொரு டூவீலரை ஓட்டி வந்த மர்ம நபர் தீடீரென ஜெயா கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் செயினை அத்துவிட்டு வேகமாக சென்றுள்ளார் உடனே ஜெயா அப்பா பால்துரை சத்தமிட அக்கம் பக்கத்தினர் சிலர் ஓடி வந்துஅத்திமரப்பட்டி எம்.ஜி.ஆர். சிலை அருகே மடக்கி பிடித்தனர். அதன் பிறகு அந்த மர்மநபர் அத்திமரப்பட்டியை […]
சென்னையில் உள்ள தரமணி என்ற பகுதியை சேர்ந்தவர், ராஜா மொயிதீன். இவர் கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ள பாலவாக்கத்தில் கறி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த மூன்றாம் தேதி அவரது குடும்பத்தினருடன் கோவளத்திற்கு சென்றார். மாலை வீடு திரும்பிய அவர், தனது வீட்டு கதவு திறந்தே இருப்பதை கண்டு அதிர்ந்தார். மேலும், உள்ளே சென்று பார்த்த பொது, அவர் பீரோவில் இருந்த 14 லட்ச ரூபாய் பணமும், 9 சவரன் நகையும் […]
சென்னை; அம்பத்தூர் மற்றும் கொரட்டூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கருக்கு பகுதியில் வாகனத் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்களை போலீசார் மடக்கி விசாரித்தனர். போலீஸ் விசாரணையில் இவர்கள் பல்வேறு பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்ததால் மூவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 40 சவரன் நகை, 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. […]