சென்னை:உரிமம் இல்லாத இறைச்சிக்கடைகள் நடத்துவோர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள உரிமம் இல்லாத இறைச்சிக்கடைகள் நடத்துவோர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இறைச்சி கடைகளுக்கான விதிகளை அமல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும்,விதிகளை அமல்படுத்தாத அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி […]
நவம்பர் 4 ஆம் தேதியன்று அனைத்து இறைச்சிக் கடைகள் இயங்க,இறைச்சி விற்பனை செய்ய சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது. மகாவீர் நிர்வான் நாளை முன்னிட்டு நவம்பர் 4 ஆம் தேதியன்று சென்னையில் அனைத்து இறைச்சி கடைகளும் இயங்கத் தடை விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.அதில் கூறப்பட்டிருப்பதாவது: “பெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறையின் (கால்நடை மருத்துவப்பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக்கூடங்கள் அனைத்தும் வருகின்ற 04.11.2021 (வியாழக்கிழமை) அன்று மகாவீர் நிர்வான் நாளை முன்னிட்டு, அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன. […]