இந்திய அணியின்தொடக்க வீரர் நேற்றைய போட்டியில் ஹிட்மேன் 4 ரன்கள் எடுத்த போது சர்வதேச ஒருநாள் போட்டியில் 9 ஆயிரம் ரன்களை எட்டிய புதிய மைல்கல் சாதனை படைத்தார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 9 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை ஹிட்மேன் பிடித்துள்ளார். இந்தியாவில் ஆஸ்திரேலியா அணி பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. நேற்று 3-வது ஒரு நாள் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. […]