அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்கு அலோபதி முறை தான் சிறந்தது என்பதில் சந்தேகமில்லை என பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். தேவையற்ற மருந்துகளை உபயோகிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை கடந்த மாதம் யோகா மற்றும் ஆயுர்வேத சிகிச்சை தான் கொரோனாவை குணப்படுத்தும் எனவும், தடுப்பூசி போட வேண்டும் என்று அவசியமில்லை எனவும் பாபா ராம்தேவ் சர்ச்சையான கருத்துக்களை கூறியிருந்தார். மேலும் கொரோனா மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் செயல் திறன் குறித்த பல கேள்விகளை எழுப்பியிருந்தார். […]
அலோபதி மருத்துவ முறை குறித்து தவறான கருத்து தெரிவித்ததால், பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனத்தின் உரிமையாளரான பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது தீவிரமடைந்துள்ள நிலையில்,கொரோனா தொற்றிலிருந்து நோயாளிகளை குணப்படுத்த ஆங்கில மருத்துவம்,சித்தா உள்ளிட்ட சிகிச்சை முறைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில்,பாபா ராம்தேவ் சமீபத்தில் அலோபதி மருத்துவம் குறித்து காணொளி ஒன்றில் தவறாக பேசியுள்ளார். அதில்,பாபா ராம்தேவ் கூறியிருப்பதாவது,”அலோபதி மருத்துவம் ஒரு முட்டாள்தனமான அறிவியல்,அதனால்,இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையில் ஆக்சிஜன் கிடைக்காமல் […]