19.46 கோடி கடல் அரிப்பு தடுப்பு பணி மற்றும் இறங்குதளம் அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் தலைமையில், மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டம் சின்ன மேடு மற்றும் கூழையாறு கிராமங்களில் 19.46 கோடியில் கடல் அரிப்பு தடுப்பு பணிகள் மற்றும் மீன் இறங்கு தளம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் மீன்வலை பின்னும் கூடம், […]
மகாராஷ்டிராவின் மாநிலத்தின் முக்கிய அரசியல் சக்தியாகவும் சிவசேனா கட்சியின் நிறுவனராகவும் விளங்கிய பால்தாக்கரேவின் நினைவிடத்தை கட்ட 100 கோடி ரூபாய் ஒதுக்கி மகாராஷ்டிரா மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அவரது நினைவிடத்தை அமைப்பதற்காக மேயர் பங்காளவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. நினைவிடம் அமைப்பதற்கான பூமி பூஜை இம்மாதத்தின் இறுதியில் துவங்க இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று கூறப்படுகின்றது.