சிறப்பு குழந்தைகளை வைத்திருக்கின்ற அரசு ஊழியர்களுக்கு 6 நாட்கள் சாதாரண விடுப்பு எடுக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவுப் பிறப்பித்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதத்தில் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை மானியக்கோரிக்கையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து பேசியதாவது: சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை கொண்ட அரசு ஊழியர்கள் அக்குழந்தைகளின் நலன்களை பராமரிக்க மேற்கொள்ளுகின்ற சிரமத்தை குறைக்கும் நோக்கோடு அத்தகைய குழந்தைகளின் பெற்றோர்களாக இருக்கும் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 6 நாட்கள் […]