நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜக இன்று கண்டன ஆர்பாட்டம் நடத்துகிறது. சிதம்பரத்தில் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் சென்ற நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டுள்ளார்.திருமாவளவனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த பா.ஜ.க. திட்டமிட்டிருந்தது ஆனால் ஆர்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறிச் சென்ற நடிகை குஷ்பு முட்டுக்காடு அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குளிக்கும் போது 15 வயது சிறுமியை வீடியோ எடுத்து 3 இளைஞர்கள் மிரட்டியதால் தீக்குளித்துள்ளார். தற்போது போலீசாரால் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலூரை சேர்ந்த 15 வயதுடைய மாணவி ஒருவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள திறந்த வெளி பகுதியில் குளித்துள்ளார். அப்போது அதனை அப்பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அதனையடுத்து அந்த வீடியோவை மாணவியின் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி, 5 ஆயிரம் பணம் மற்றும் தங்களது ஆசைக்கு இணங்குமாறும் கூறியுள்ளனர். இல்லாவிட்டால் இந்த […]