சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கடன்களை திருப்பிச் செலுத்த கூடுதல் காலஅவகாசம் தர வேண்டும் என்று, 12 மாநில முதலமைச்சர்களுக்கு,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கொரோனா பெருந்தொற்றால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில்கொண்டு,குறு,சிறு,நடுத்தரத் தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் சிறு கடனாளர்கள்,இரு காலாண்டுகளுக்கு கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்குவது தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஆகியோரை வலியுறுத்த வேண்டுமெனக் கோரி,கேரளா, மேற்கு வங்கம் […]