உலக அளவில் ஏற்றுமதி செய்யும் நிறுவனமான ஃபெடெக்ஸ் நிறுவனத்தின் ஷேர் மதிப்பு கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, வரலாறு காணாத சரிவு அடைந்துள்ளது. நவம்பர் மாதம் வரை நடக்கவிருக்கும் நடப்பு இரண்டாம் காலாண்டில் வணிக நிலைமைகள் மேலும் பலவீனமடையும் என எதிர்பார்ப்பதாக FedEx தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி ஃபெடெக்ஸ் நிறுவனத்தின் ஷேர் மதிப்பு 21% க்கும் மேலாகக் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அந்நிறுவனம் $11 பில்லியன் இழந்துள்ளது. […]