சென்னை:முதல்வர் ஸ்டாலின் மீதான 18 அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மீது 18 அவதூறு வழக்குகள் தொடரப்பட்ட நிலையில்,அதனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவதூறு வழக்குகளை திரும்பப் பெற்ற அரசாணையை ஏற்று முதல்வரின் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னதாக தாக்கல் செய்த மனுவை […]
கடந்த ஆட்சியில் அறவழியில் போராடிய மக்கள் மீது தொடரப்பட்ட 868 வழக்குகள் வாபஸ் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு. கடந்த அதிமுக ஆட்சியில் அறவழியில் நீட் தேர்வுக்கு எதிராகவும், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகவும் போராடியவர்கள் மீது தொடரப்பட்ட 869 வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, நீட் தேர்வுக்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது போடப்பட்ட 446 வழக்குகளும், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடியவர்கள் மீது தொடரப்பட்ட 422 வழக்குகளும் வாபஸ் […]