ஒரு தலை காதல் விவகாரத்தில் பெண் பிள்ளைகள் மிகுந்த பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என விஜயகாந்த் அறிக்கை. பரங்கிமலை ரயில் நிலையத்தில் காத்திருந்த சத்யபிரியா என்ற கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளி இளைஞர் கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கல்லூரி மாணவி சத்யபிரியாவை ஓடும் ரயில் முன் தள்ளி கொலை செய்த இளைஞர் சதீஷ்க்கு அதிகபட்ச தண்டனையான […]
சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சதிஷ் என்பவர், அதே பகுதியை சேர்ந்த சத்யா என்ற கல்லூரி மாணவியை நேற்று சென்னை பரங்கிமலை ரயில் முன் தள்ளி கொலை செய்துள்ளார். இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே மாணவி உயிரிழந்தார். மாணவியின் தந்தை மாணிக்கம் மகள் இறந்த துக்கத்தில் இருந்த நிலையில், அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு அவரும் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சத்யாவை ரயில் முன் தள்ளி கொன்ற குற்றவாளி சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு […]
சென்னை பரங்கிமலை ரயில் நிலைத்தில் கல்லூரி மாணவி சத்யாவை, சதீஸ் எனும் இளைஞன் ரயில் முன்பு தள்ளிவிட்டதில் மாணவி உயிரிழந்தார். கொலையாளி சதீஷ் தப்பியோட்டம். சென்னையில் இன்று மதியம் 1 மணி அளவில் பரங்கி மலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு இளைஞர் கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த சத்யா (வயது 20) எனும் கல்லூரி மாணவியை, அதே பகுதியை சேர்ந்த சதீஷ் எனும் […]
ராஜஸ்தான்:சக மாணவர்களுடன் பாலியல் ரீதியான உறவில் ஈடுபட மறுத்த 19 வயது மாணவிக்கு விஷம் கொடுத்து கொலை. ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும் 19 வயது கல்லூரி மாணவியை தங்களுடன் பாலியல் ரீதியான உறவில் ஈடுபட மறுத்ததற்காக அவரது வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் 5 பேர் விஷம் கொடுத்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தங்களுடன் பாலியல் உறவு கொள்ளுமாறு மாணவர்கள் வற்புறுத்திய நிலையில்,அதனை மாணவி மறுத்ததால்,அவருக்கு விஷம் கொடுத்துள்ளனர்.இதனால் […]