பராமரிப்பு பணிகளுக்காக டிசம்பர் 31 வரையில் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. – ரயில்வே துறை. ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலத்தை குறிப்பிட்ட கால இடைவெளியில் அதன் தரத்தை பொறியாளர்கள் ஆய்வு செய்வார்கள். அதன் பிறகு அதில் பராமரிப்பு பணிகள் நடைபெறும். அதன் படி, தற்போது ரயில்வே பொறியாளர்கள் மற்றும் ஐஐடி வல்லுநர்கள் இணைந்து ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்காக டிசம்பர் 31 வரையில் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து […]
பாம்பன் ரயில் பாலத்தில் காற்றின் வேகம் அதிகம் உள்ளதால் ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்ட ராமேஸ்வரம் – சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் ராமேஸ்வரம் – மதுரை பயணிகள் தற்போது ரயில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக தென்னக இரயில்வேயும் அதிகார பூர்வமாக ராமேஸ்வரம் – சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் ராமேஸ்வரம் – மதுரை பயணிகள் தற்போது ரயில் நிறுத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது .