boat sinks: ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் வடக்கு கடற்பகுதியில் சிறு படகு மூழ்கியதில் 90 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு. ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் நம்புலா மாகாணத்திலிருந்து மீன்பிடி படகு ஒன்று சுமார் 130 பேரை ஏற்றிக் கொண்டு அங்குள்ள ஒரு தீவை அடைய முயன்றபோது கடலில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளது. கடலில் படகு மூழ்கியதால் குழந்தைகள் உட்பட 91 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், விபத்தில் சிக்கிய 5 பேரை மீட்பு படையினர் மீட்டனர். மேலும் […]
குஜராத் மாநிலத்தில் வதோதரா பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதரா அருகே ஹர்னி என்ற ஏரிக்கு சுற்றுலா செல்ல பள்ளி மாணவர்கள் சார்பில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 27 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் படகில் பயணம் செய்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. படகு கவிழ்ந்ததில் 2 ஆசிரியர்கள் 14 […]
நைஜீரியாவில் உள்ள வடமேற்கு மாநிலமாகிய சோகோடோ எனும் பகுதியில் உள்ள ஆற்றில் மரப் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து சொகோடோ பகுதியின் அலியு தண்டனி எனும் அரசு அதிகாரி ஒருவர் பேசுகையில், பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் பெண்கள் தான் எனவும், அவர்கள் பக்கத்தில் உள்ள பதியவா எனும் பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது, இந்த விபத்து ஏற்பட்டதாகவும், உயிரிழந்தவர்களில் 21 பேர் பெண்கள் […]
துனிசியாவில் இரண்டு அகதிகள் படகுகள் மூழ்கியதில் சுமார் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு இறந்தவர்களில் நான்கு பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகளும் அடங்குவர்.மேலும் 10 பேர் காணாமல் போனதாகவும்,சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்திய மாதங்களில்,வறுமை காரணமாக துனிசியா மற்றும் லிபியாவிலிருந்து இத்தாலியை நோக்கி மக்கள் படையெடுக்கும் நிலையில் துனிசிய கடற்கரையில் நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்நிலையில்,படகுகள் மூழ்கியதில் சுமார் 13 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்காளதேசத்தில் பத்மா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று சிறு குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். பத்மா நதியில் நேற்று பிற்பகலில் சுமார் 50 பயணிகளுடன் பயணித்த படகு மூழ்கியுள்ளது. இதில் மூன்று சிறு குழந்தைகள் மற்றும் 50 வயது பெண் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த விபத்து மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படகில் பயணிகள் தவிர, உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் சரக்கு, தேங்காய் மற்றும் சைக்கிள்களையும் எடுத்துச் […]
சீனாவின் ஜாங்கே ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 5 பேரை காணவில்லை. தென்மேற்கு சீனாவின் கைஜோ மாகாணத்தில் லுபான்ஷுய் நகரில் உள்ள ஜாங்கே டவுன்ஷிப்பில் அமைந்துள்ள ஜாங்கே ஆற்றில் பயணிகள் கப்பல் ஆற்றில் கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் ஐந்து பேர் காணாமல் போனதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படகில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள். இந்த விபத்து மாலை 4:50 மணிக்கு ஏற்பட்டுள்ளது. இந்த படகில் 40 பேர் வரை […]
மகாராஷ்டிராவில் உள்ள வரதா ஆற்றில் படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 11 பேர் காணாமல் போய் உள்ளனர். மகாராஷ்டிர மாநிலம், அமராவதி மாவட்டத்தில் உள்ள வரதா ஆற்றில் காலை 10.30 மணியளவில் படகு ஒன்று கவிழ்ந்துள்ளது. இதில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 11 பேர் நீரில் மூழ்கியிருக்கலாம் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. காவல்துறை மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் குழு தற்போது மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும் இதுவரை ஒரு சிறுமியின் உடல் […]
அசாம் மாநிலத்தின் பிரம்மபுத்ரா ஆற்றில் ஏற்பட்ட படகு விபத்தில் 70 பேரை காணவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலம் ஜோராட் பகுதியில் உள்ள பிரம்மபுத்ரா ஆற்றில் நேற்று மா கமலா என்ற எந்திர படகு புறப்பட தாயாராக இருந்த நிலையில், அவ்விடத்திற்கு மற்றொரு படகு வந்துள்ளது. இதனால் வரும் படகிற்கு இடம் அளிக்க மா கமலா படகு சற்று நகர்ந்துள்ளது. மா கமலா படகில் 120 பயணிகள் இருந்துள்ளனர். இந்த நிலையில் படகு நகர்ந்த போது […]
பெரு நாட்டில் இரண்டு படகுகள் மோதி 11 பேர் உயிரிழந்துள்ளனர். பெரு நாட்டில் உள்ள ஹல்லகா ஆற்றில் படகு விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று சாண்டா மரியாவிலிருந்து யுரிமைகஸ் என்ற பகுதிக்கு படகு மூலம் ஹல்லகா ஆற்றில் 80 பேர் பயணித்துள்ளனர். அந்த சமயத்தில் ஆற்றில் மோட்டார் படகு ஒன்று சென்றுள்ளது. அப்போது மோட்டார் படகு இந்த படகின் மேல் மோதியதில் 11 பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்து குறித்து தெரிவிக்கப்பட்டதுடன் அந்நாட்டின் மீட்பு படை மற்றும் பாதுகாப்பு […]