பங்களாதேஷில் மஹாலயா விழாவுக்குச் செல்லும் வழியில் கரடோயா ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 24 பேர் உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை(SEP 25) பிற்பகல் மஹாலய தினத்தை முன்னிட்டு கோவிலுக்கு பயணிகளுடன் சென்ற படகு ஒன்று கரடோயா ஆற்றின் நடுவில் மூழ்கி 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் டசன் கணக்கில் மக்களை காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தின் போது நீரில் மூழ்கியவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவதாகவும், காணாமல் போனவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த […]
நேற்று ஒன்பது பேருடன் குஜராத் கடற்கரைக்கு வந்த பாகிஸ்தானை சேர்ந்த மீன்பிடி படகு ஒன்று குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை போலீசார் மற்றும் இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு உள்ளது. இந்த படகில் இருந்த ஒன்பது பேருடன் படகில் போதை பொருட்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக கூறியுள்ள கடலோர காவல்படையினர், அந்த படகை இந்திய கடல் பகுதிக்குள் நுழையவிடாமல் தடுத்ததாகவும், அதில் பல போதைப்பொருட்கள் இருந்ததாகவும், அவர்கள் அதை கடலில் வீசிவிட்டு […]
கச்சத்தீவு அருகே இலங்கை ரோந்து கப்பல் மோதி ராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் விசைப்படகு கடலில் மூழ்கியுள்ளதாக மீனவர்கள் தகவல் அளித்துள்ளனர். நேற்று ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.இந்நிலையில், கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை ரோந்து கப்பல் மோதி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் படகு கடலில் மூழ்கியுள்ளதாக மீனவர்கள் தகவல் அளித்துள்ளனர். தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை ரோந்து கப்பல் மோதிய நிலையில்,கடலில் மூழ்கிய […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பள்ளிக்கு தினமும் 11 ஆம் வகுப்பு மாணவி படகு ஓட்டி செல்கின்றார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கனமழையால் பஹ்ராம்பூரில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது அம்மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி சந்தியா சாஹினி, வேறு வழியின்றி பள்ளிக்கு தினமும் பள்ளி சீருடையில் 800 மீ தொலைவு படகு ஓட்டி சென்று படித்து வருகிறார். இது குறித்து அம்மாணவி தெரிவித்துள்ளதாவது, பள்ளிகள் கொரோனா தொற்று காரணமாக […]
கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தால் 4 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் உள்ள கடற்பகுதியில் 5 நாட்டிகல் மைல் தொலைவில் மீனவர்கள் படகில் மீன் பிடித்துள்ளனர். பின்னர் கரைக்கு மீனவர்கள் திரும்பியுள்ளனர். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்துள்ளது. இந்த படகில் மொத்தமாக 16 மீனவர்கள் பயணித்து உள்ளனர். இந்த படகு விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், மீதமுள்ள 12 மீனவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து […]