5 நாட்கள் நாய் உணவை சாப்பிட்டால் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என நாய் உணவு தயாரிக்கும் ஆம்னி நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று அதிகமானோர் வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்க்கப்படுவதுண்டு. அந்த செல்லப்பிராணிகளுக்கு என விதவிதமான உணவுகள் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாய்களுக்கு உணவு தயாரிக்கும் ஆம்னி என்ற ஒரு நிறுவனம் காய்கறிகள், பழங்கள் கொண்டு தூய்மையான முறையில் மனிதர்களும் சாப்பிடும் வகையில் எந்த ஒரு கெமிக்கல் சேர்க்காமல் உணவு தயாரிக்கின்றனர். இந்த நிலையில் நிறுவனம் […]
ஐஐடி வளாகம் உயிரியல் பூங்கா அல்ல என்றும், நாய்களை பராமரிப்பது ஐஐடி-யின் பணியில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில், கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பு, சென்னை ஐஐடி வளாகத்தில் சுற்றி திரிய கூடிய கால்நடைகளை முறையாக கவனிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதி கேசவலு தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ஐஐடி வளாகத்தில் கடந்த 6 மாதங்களில் 49 நாய்கள் இறந்துள்ளன. நாய்கள் […]
உத்தரப்பிரதேசத்தில் உணவில் விஷம் கலந்து கொடுத்து 20 நாய்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகல் பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சாப்பிடும் ரொட்டிகளில் விஷம் கலந்து நாய்களுக்கு கொடுத்துள்ளனர். இதனால் அவற்றை சாப்பிட்ட 20 நாய்கள் தற்போது உயிரிழந்துள்ளது. மேலும், இது குறித்து பசௌரா கிராமத்தின் தலைவர் சுக்நந்தன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இந்த பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் நாய்களுக்கு உணவில் விஷம் […]