புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோவில் தேர் விபத்து நடந்த சமயம், பணியில் இருந்த கோவில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டையில் பிரபலமாக இருக்கும் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி ஆடிப்பூரத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே முன்பக்கமாக சரிந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 8 பேர் காயமடைந்தனர். மேலும், அரிமளம் எனும் ஊரை சேர்ந்த ராஜகுமாரி எனும் 64 வயது மூதாட்டி படுகாயமுற்று அரசு […]
தஞ்சை தேர் விபத்து குறித்து இன்று விசாரணையை தொடங்குகிறார் வருவாய்த்துறை முதன்மை செயலாளர். தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் கடந்த 27-ஆம் தேதி அதிகாலை சித்திரை திருவிழாவையொட்டி நடைபெற்ற தேர்த் திருவிழாவின்போது மின்சாரம் பாய்ந்த ஏற்பட்டதால், 11 பேர் பலியான நிலையில், 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து, அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரண உதவிகளையும் அறிவித்தது. […]
தேர்விபத்தில் உயிரிழந்த இளைஞர் தீப ராஜன் குடும்பத்தினருக்கு முதல்வர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவியும் அறிவித்துள்ளார். நாகை மாவட்டம் திருமருகல் அருகே, உத்திராபதிஸ்வரர் ஆலயத்தின் ஆண்டு திருவிழா நடைபெற்றது. இந்த விழாவின் தேரின் சக்கரத்திற்கு முட்டுக்கட்டை வைத்த போது, சப்பரத்தின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் தீபராஜன் என்பவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின் விபத்து ஏற்பட்டதால், 11 பேர் பலியான நிலையில், […]
நாகை மாவட்டம் திருமருகல் அருகே, உத்திராபதிஸ்வரர் ஆலயத்தின் ஆண்டு திருவிழாவில் தேரின் சக்கரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு. நாகை மாவட்டம் திருமருகல் அருகே, உத்திராபதிஸ்வரர் ஆலயத்தின் ஆண்டு திருவிழா நடைபெற்றது. இந்த விழாவின் தேரின் சக்கரத்திற்கு முட்டுக்கட்டை வைத்த போது, சப்பரத்தின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் தீபராஜன் என்பவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின் விபத்து ஏற்பட்டதால், 11 பேர் பலியான நிலையில், நாகை மாவட்டத்தில் தேரின் […]