மாடல் அழகியும், நடிகையுமான ரியா சென் தமிழ் சினிமாவில் தாஜ்மஹால் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர். இவர் இந்த திரைப்படத்தில் நடிக்கும்போது இவருக்கு வயது 19- தான். அந்த அளவுக்கு சிறிய வயதிலே இவருக்கு தமிழ் ஹீரோயினாக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது. அந்த படத்தில் இவருடைய நடிப்பை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். தாஜ்மஹால் படத்தில் அவ்வளவு அழகாக நடித்திருப்பார். தாஜ்மஹால் படத்தை தொடர்ந்து தமிழில் அரசாட்சி படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், இந்த படங்களுக்கு […]
தாஜ்மஹாலை பார்க்க செல்ல வேண்டும் என்றால் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என்ற சான்று கட்டாயம். – ஆக்ரா மாவட்ட நிர்வாகம். உலகில் ஒரு சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் ஆரம்பித்துள்ள காரணத்தால் மத்திய அரசும் அதற்கான வழிகாட்டு அறிவுறுத்தல்களை மாநில அரசுகளுக்கு வழங்கி வருகிறது. மேலும் மக்கள் முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தியது. தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பார்க்க செல்ல வேண்டும் என்றால் கொரோனா பரிசோதனை செய்து […]
இந்தியாவின் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால் முகலாய பேரரசர் ஷாஜகானால் கடந்த 1632-இல் கட்டப்பட்ட நிலையில்,உலக அதியங்களில் ஒன்றாக சிறந்து விளங்குகிறது. இந்நிலையில்,தாஜ்மஹால் கட்டடம் கட்டப்பட்ட நிலம் முதலில் ஜெய்ப்பூர் அரச குடும்பத்துக்கு சொந்தமானது என்றும், அதன்பின்னர்,இந்த நிலம் முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் கையகப்படுத்தப்பட்டது என்றும்,ராஜஸ்தானின் பாரதிய ஜனதா (பாஜக) நாடாளுமன்ற உறுப்பினர் தியா குமாரி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்,இது தொடர்பாக முன்னாள் ஜெய்ப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த எம்பி குமாரி கூறுகையில்,”இந்த நிலம் ஜெய்ப்பூர் குடும்பத்துக்குச் […]
ரம்ஜான் பண்டிகையையொட்டி இன்று தாஜ்மஹாலில் தொழுகை நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையன்று தாஜ்மஹாலில் தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்தியாவில் புனித ரம்ஜான் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது.ரம்ஜான் பண்டிகையையொட்டி இன்று தாஜ்மஹாலில் தொழுகை நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,காலை 7 மணி முதல் 9 மணி வரை மட்டும் இரண்டு மணி நேரம் தொழுகை செய்ய அனுமதி இலவசம் […]
நாளை ரம்ஜான் பண்டிகையையொட்டி தாஜ்மஹாலில் தொழுகை நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையன்று தாஜ்மஹாலில் தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாளை ரம்ஜான் பண்டிகையையொட்டி தாஜ்மஹாலில் தொழுகை நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படிகாலை 7 மணி முதல் 9 மணி வரை மட்டும் இரண்டு மணி நேரம் தொழுகை செய்ய அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷாஜஹானின் நினைவு தினத்தை முன்னிட்டு 3 நாட்களுக்கு தாஜ்மஹாலை இலவசமாக சுற்றிப்பார்க்க பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முகலாய பேரரசர் ஷாஜகானின் 367-வது உர்ஸ் நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் வரும் பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் பொது மக்கள் தாஜ்மஹாலை இலவசமாக சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த அறிவிப்பை ஆக்ரா தொல்பொருள் ஆய்வாளர் குமார்படேல் தெரிவித்துள்ளார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் தரைதளத்தில் உள்ள ஷாஜகான் மற்றும் மும்தாஜ் ஆகியோரின் கல்லறைகளை […]
பாபர், ஹுமாயுன், அக்பர் மற்றும் ஜஹாங்கிர் ஆகியோருக்குப் பின்னர் இந்தியாவில் ஷாஜகான் தான் ஐந்தாவது முகலாய மன்னராக ஆட்சி புரிந்துள்ளார். ஷாஜகானின் இளமை வயதில் அக்பரின் அன்புக்கு உரியவராக இருந்துள்ளார். 1627 ஆம் ஆண்டில் தன்னுடைய தந்தை இறந்ததைத் தொடர்ந்து ஷாஜகான் அரியணை ஏறியுள்ளார். முகலாய பேரரசர்களில் முக்கியமான அரசராக இவர் கருதப்படுகிறார். அவருடைய ஆட்சி முகலாயர்களின் பொற்காலமாக வரலாறு குறிப்பிட்டுள்ளது. ஷாஜகான் ஆட்சி காலத்தில் முகலாய கட்டடக்கலையின் பொற்காலமாக இருந்துள்ளது. ஷாஜகான் நிறைய நினைவுச்சின்னங்களை எழுப்பியுள்ளார். […]
தாஜ்மஹாலை பார்வையிட்ட தல அஜித்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் அஜித், சமீபத்தில் தாஜ்மஹாலை பார்வையிட்ட பொழுது அவருடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தல அஜித் சினிமாவில் முன்னணியில் இருந்து வருகிறார். இருந்த போதிலும், அவர் தற்போது துப்பாக்கி சுடுதலில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட நடிகர் அஜித், அசத்தலான […]