Election2024: “அக்கா1825” என்ற பெயரில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தமிழிசை சௌந்தரராஜன். தெலுங்கானா ஆளுநர், புதுச்சேரிதுணைநிலை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்த தமிழிசை சௌந்தரராஜன் வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தென் சென்னை பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ளார். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தமிழிசை சௌந்தரராஜன், இன்று தென் சென்னை தொகுதிக்கான “அக்கா1825” என்ற பெயரில் தேர்தல் அறிக்கை வெளியிட்டார். இதன் பின் தமிழிசை சௌந்தரராஜன் […]
Tamilisai Soundararajan: ஏன் 5 முறை தேர்தலில் நின்று தோற்று போனது குறித்து தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், தென் சென்னை தொகுதியில் களமிறங்கியுள்ள பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன், கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழிசை செளந்தரராஜன், தான் 5 முறை […]
தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி அப்பகுதிகள் முழுவதையும் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் இரு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு கனமழையால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இந்த வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட புதுச்சேரி துணைநிலை ஆணையர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி வந்திருந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று தூத்துக்குடிக்கு வருகை தந்தார். அப்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் வெள்ளத்தை கையாள்வதில் திமுக அரசு தோல்வி அடைந்துள்ளது என்று பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” இந்த ஆட்சியை சேர்ந்தவர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது என்று சொல்கிறார்கள். நான் இப்போது நேரடியாக குற்றம்சாட்டுகிறேன் தென்மாவட்டங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழக அரசு நடத்துகிறது. […]
மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் அவர் மீதான வழக்கை முடித்து தருவதாக கூறி முதலில் ரூ.20 லட்சம் வாங்கிய நிலையில் மீதமுள்ள ரூ.31 லட்சத்தை வாங்கியபோது திண்டுக்கல்லில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சிக்கினார். 15 மணி நேர விசாரணைக்கு பின் திண்டுக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆஜர்படுத்தினர். இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 15 நாட்கள் சிறையில் அடைக்க திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமலாக்கத்துறை அதிகாரி கைது.. […]
நான் விரைவில் முதல்வர் ரங்கசாமி அண்ணனிடம் நேரடியாக பேசி என்ன பிரச்சனையோ அதனை தீர்த்து வைப்பேன். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் பேட்டி. புதுச்சேரியில் இன்று அப்துல்கலாம் செயற்கைகோள் திட்டம் 2023-ஐ புதுச்சேரி துணைநிலை ஆளுனர் தமிழிசை துவங்கி வைத்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேசியது குறித்து பேசியிருந்தார். கடந்த வாரம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி முதல்வர் கூறுகையில் புதுச்சேரியில் எல்லா திட்டங்களையும் நிறைவேற்ற காலதாமதமாகிறது. எல்லாவற்றிற்கும் மத்திய […]
தேச உணர்வு உள்ளவர்கள் காந்தி ஜெயந்தி அன்று பேரணி செய்வதில் என்ன தவறு? என ஆளுநர் தமிழிசை கேள்வி. வரும் அக்டோபர் 2ஆம் தேதி தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த உள்ளனர். இதற்கு திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், காந்தி ஜெயந்தி கொண்டாட ஆர்எஸ்எஸ் சகோதரர்களுக்கும் மற்றவர்களை போல் உரிமை உள்ளது. அனைவரும் சமம் என்று சொல்லும் போது […]
புதுச்சேரியை சென்றடைந்த ஒலிம்பியாட் ஜோதியை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பெற்றுக்கொண்டார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொடக்க விழா நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்த தமிழக அரசு […]
தெலுங்கானா மாநில ஆளுநர் மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட். தெலுங்கானா மாநில ஆளுநர் மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் மாண்புமிகு ஆளுநரும், எப்போதும் என் அன்புக்குரிய […]
அறிஞர் அண்ணா விருது பெற்ற ஒருவர் என்னை ஒருமையில் இரு மாநிலத்திற்கு ஆளுநர் என பேசியுள்ளார் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு கருதத்தரங்கை தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், யாரையாவது திட்டுவதாக இருந்தால் கூட அழகு தமிழில் மரியாதையாக திட்டுங்கள். அறிஞர் அண்ணா விருது பெற்ற ஒருவர் என்னை ஒருமையில் இரு மாநிலத்திற்கு ஆளுநர் எனபேசியுள்ளார். இரண்டு […]
புதுவை கடற்கரை சாலையில் ஒளவையார் விழா நடைபெற்றது. இந்த விழாவை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தொடக்கி வைத்தார். இந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், வாயில் நுழையாத பெயரை பிள்ளைகளுக்கு பெற்றோர் சூட்டுவதாக குற்றசாட்டியதுடன், தமிழை படித்தால் தான் உயர்வு என்பதை அறிய வேண்டும். தயவு செய்து பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு தமிழ் பெயரை சூட்டுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு அரசியல், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேசிய பெண்குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பெண்ணினம் என்பது மெல்லினம் அல்ல வல்லினம் என்பதை நிரூபிப்போம் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ட்வீட். கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஜனவரி 24-ஆம் தேதி தேசிய பெண்குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘பெண்ணினம் என்பது மெல்லினம் அல்ல வல்லினம் என்பதை இந்த சமூகம் நிரூபிப்பதற்கு அடித்தளமாக இந்த சர்வதேச பெண் குழந்தைகள் […]
தலைமுறை தலைமுறையாக இராணுவப்பணியில் ஈடுபட்டிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த திரு.பிபின் ராவத் அவர்கள் தமிழ் மண்ணில் விபத்தில் உயிரிழந்ததை என் மனம் ஏற்க மறுக்கிறது என தெலுங்கானா ஆளுநர் ட்வீட். ராணுவ ஹெலிஹாப்டர் குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி முழுமையாக எரிந்துள்ளது.சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது, காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில், […]
புதுச்சேரியில் விநாயகர் சதூர்த்தி கொண்டாட்டங்களுக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அனுமதி அளித்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலம் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுபோல, புதுச்சேரியிலும் விநாயகர் சதூர்த்தி கொண்டாட்டங்களுக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அனுமதி அளித்துள்ளார். மேலும், விநாயகர் சதூர்த்தி கொண்டாட்டங்களை கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து கொண்டாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் விநாயகர் சதூர்த்தி கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் […]
புதுச்சேரியில் செப்.3-ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிப்பு. இன்று புதுச்சேரியில் 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை அவர்கள் புதுச்சேரி சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக, திருக்குறளை மேற்கோள்காட்டி தமிழில் உரையாற்றினார். அதனை தொடர்ந்து, புதுச்சேரியின் துணை சபாநாயகராக என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜவேலு அவர்கள் பதவியேற்றுக் கொண்டார். மேலும், இன்று மாலை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள், 2021-2022 ஆம் ஆண்டுக்கான […]
புதுச்சேரி மாநிலத்தில் மதுபானங்களுக்கு கொரோனா வரி நீக்கப்பட்டதை தொடர்ந்து, அம்மாநிலத்தில் மதுபானங்களின் விலை குறைந்தது. இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் அளிக்கப்பட்ட தளர்வுகளின்படி மே 24-ஆம் தேதி முதல் மதுபானக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது. கொரோனா காலத்தில் தமிழகத்தில் இருந்து மதுபானங்கள் வாங்க யாரும் புதுச்சேரிக்குள் வராமல் இருக்க மதுபானங்களுக்கு சிறப்பு கலால் வரியில் 25% கூடுதல் வரியை விதித்து, அதை மார்ச் 31, 2021 வரை நீட்டித்து உத்தரவிட்டது. […]
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. அங்கு பா.ஜ.க. நிச்சயம் ஆட்சி அமைக்கும். ஏனென்றால் மக்கள் காங்கிரசுக்கு எதிராக வாக்களித்து இருக்கிறார்கள். அங்கு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தான் தமிழகத்துடனான உறவு இன்னும் சீராக பாதுகாக்கப்படும். அதுமட்டுமல்ல, காவிரி பிரச்சினையும் இல்லாமல் இருக்க வேண்டுமானல் பா.ஜ.க. ஆட்சி அமைய வேண்டும். மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் குமாரசாமி தேர்தல் அறிக்கையிலேயே காவிரி அவர்களின் உரிமை என்பதை போலவும், காவிரியை தமிழகம் சொந்தம் […]