Jharkhand Rape Case: இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டுப் பெண் வன்கொடுமை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்த காவலர்கள் தப்பியோடிய 4 பேரை தேடி வருகின்றனர். தற்போது, அந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு ஜார்கண்ட் துணை கமிஷனர் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கினார். READ MORE – ஸ்பெயின் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு .! தலைமை செயலர், டிஜிபிக்கு பறந்த உத்தரவு.! அப்போது […]
Gang Rape Case – ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி இரு சக்கர வாகனத்தில் ஆசிய நாடுகளை சுற்றி பார்த்து வந்துள்ளனர். அவர்கள் வங்கதேசம், நேபாளம் என சுற்றி பின்னர் இந்தியா வந்துள்ளனர். இந்தியா சுற்றி பார்க்க வந்த வெளிநாட்டு தம்பதிக்கு மார்ச் 1ஆம் தேதி இரவு நேர்ந்த கொடூரம் இந்தியா முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 1ஆம் தேதி இரவு ஜார்கண்ட் மாநிலம் தலைநகர் ராஞ்சியில் இருந்து சுமார் 300 கிமீ தொலைவில், […]
Jharkhand : பீகார் மாநிலம் பாகல்பூரில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் வழியாக கர்நாடகா மாநிலம் பெங்களூரு நோக்கி செல்லும் அங்க எக்ஸ்பிரஸ் (Anga Express) ரயில் நேற்று இரவு 7 மணி அளவில், ஜார்கண்ட் மாநிலம் வித்யாசாகர் – காசிதர் பகுதிக்கு இடையே சென்று கொண்டு இருக்கும் போது அந்த ரயிலில் தீ பற்றியதாக வதந்தி பரவியுள்ளது. தீ பற்றியதாக வதந்தி பரவியதும், சில பயணிகள் ரயிலின் அவசரகால சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி வெளியில் ஓடியதாக […]
ஜார்கண்ட் மாநில முதல்வராக பொறுப்பில் இருந்த ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறையினர் கைது செய்த பின்னர், புதிய முதல்வராக ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் முக்கிய தலைவராக இருந்த சம்பாய் சோரன் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா , காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் , மாநில போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த சம்பாய் சோரன் முதல்வராக தேர்வு செய்யப்பட்டு, ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவருக்கு பதவி […]
ஜார்கண்ட் மாநில முதல்வராக பொறுப்பில் இருந்த ஹேமந்த் சோரனை. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அமலாக்கத்துறை விசாரணைக்கு செல்வதற்கு முன்னரே ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். தற்போது அவர் விசாரணை காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து, ஜார்கண்ட் மாநில புதிய முதல்வராக, மாநில போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டு, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா , காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி எம்எல்ஏக்கள் […]
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் பல மணிநேரம் விசாரணைக்கு பிறகு கடந்த புதன்கிழமை ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த கைதுக்கு முன்பே தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநரிடம் ஹேமந்த் சோரன் வழங்கினார். இதன்பின், ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சம்பாய் சோரன், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் நேற்று முதலமைச்சராக […]
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜார்கண்ட் மாநில முதல்வர் பொறுப்பில் இருந்த ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறையினர் கடந்த புதன் கிழமை இரவு கைது செய்தனர். விசாரணைக்கு வரும் முன்னரே ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு வந்திருந்தார் சோரன். ஹேமந்த் சோரன் கைது எதிரொலி… நாடாளுமன்றம் தொடங்கியதும் அமளி.! எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு.! ஹேமந்த் சோரனிடம் பல மணிநேர விசாரணை முடிந்து பின்னர் அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்யப்பட்டார். பின்னர், ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் […]
ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறை கைது நடவடிக்கையை தொடர்ந்து புதிய முதல்வராக பொறுப்பேற்க ஜார்கண்ட் மாநில போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் , தனது ஆதரவு எம்எல்ஏக்கள் கடிதத்துடன் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை கடந்த புதன் கிழமை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால் ஆளுநர் தரப்பிலிருந்து நேற்று வரை எந்த பதிலும் கிடைக்கப்பெறவில்லை. இதனை அடுத்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உடன் கட்சி தலைவர்கள் ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து […]
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் ஜார்கண்ட் மாநில முதல்வராக பொறுப்பில் இருந்த ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் அதாவது அமலாக்கத்துறை விசாரணைக்கு செல்வதற்கு முன்னரே தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் சி.பி.இராதாகிருஷ்ணனிடம் கொடுத்துவிட்டார். முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஒரு நாள் நீதிமன்ற காவல்..! ராஜினாமா கடிதம் கொடுத்த பிறகு அமலக்கத்துறை விசாரணையின் பல மணிநேர விசாரணைக்கு பின்னர் சோரன் கைது செய்யப்பட்டார். இவரது கைதுக்கு பல்வேறு எதிர்க்கட்சி அரசியல் […]
ஜார்கண்ட் மாநிலத்தில், நில மோசடி, நிலக்கரி ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு தொடர்பிருப்பதாக அவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு முதற்கட்ட விசாரணை கடந்த மாதம் 20 ஆம் தேதி நடைபெற்றது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ராஜினாமா! அமலாக்கத்துறை கைது முதற்கட்ட […]
ஜார்கண்ட் மாநிலத்தில் நில மோசடி தொடர்பான வழக்கில் 600 கோடி ரூபாய் அளவில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி, அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதுவரை 14 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சூரனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி அவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அவரிடமும் கடந்த 20ஆம் தேதி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சண்டிகர் மேயர் தேர்தல் – ஐகோர்ட்டில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் வழக்கு! […]
நேற்று (வியாழக்கிழமை) மும்பை – ஹவுரா இடையேயான ரயில்வே வழித்தடத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் மனோகர்பூர் மற்றும் கோயில்கேரா இடையே உள்ள ரயில் பாதையின் ஒரு பகுதியானது மர்ம நபர்களால் வெடி வைத்து சேதப்படுத்தப்பட்டது. நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல்… மத்திய அரசு புதிய முடிவு.! இந்த நாச வேலையை செய்தது நக்சலைட்டுகள் என விசாரணையில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது கோயில்கேரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளது.ரயில் தண்டவாளம் சேதம் காரணமாக ஹவுரா-மும்பை வழித்தடத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. […]
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் (Rajya saba MP) தீரஜ் சாஹு (Dhiraj sahu ) வீடு, அலுவலகங்கள் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையானது ஒடிசா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் தொடர்ந்தது. இது ஒரு ஜனநாயகப் படுகொலை – மம்தா பானர்ஜி இந்த 3 நாள் அமலாக்கத்துறை சோதனையில் தீரஜ் சாஹு தொடர்புடைய இடங்களில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. எவ்வளவு பணம் என்பது இன்னும் உறுதியாக […]
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் கைதாகி உள்ள ஜார்கண்ட் மாநில பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா சிங்கலின் 82 கோடிகள் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. ஜார்கண்ட் மாநிலத்தில் சுரங்கத்துறை செயலாளராக பணிபுரிந்த ஐஏஎஸ் அதிகாரி பூஜா சிங்கல், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் கமிஷன் பெற்று பண மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு இருந்தது. தற்போது அவர் தனது பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் மீது கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும், […]
ஜார்கண்டில் 6ஆம் வகுப்பு மாணவர்கள் 13 பேரை ஆசிரியர் கரும்புகளால் கொடூரமாக தாக்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் மாநிலம் கும்லாவில் பள்ளி ஆசிரியர் ஒருவர், 6ஆம் வகுப்பு மாணவர்கள் 13பேரை கரும்புகளால் கொடூரமாகத் தாக்கியதைத் தொடர்ந்து மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போது, மாணவர்கள் தனது உத்தரவின் படி நடனமாட மறுத்ததால் கோபமடைந்த ஆசிரியர் மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. ஆசிரியரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் 6-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளியின் வகுப்பறைக்குள் […]
ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு மரம் வளர்த்து பராமரித்தால் 5 யூனிட் மின்சாரம் இலவசம் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அண்மையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது , ஜார்கண்ட் மாநிலத்தில் சமீப காலமாக மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறதாம். அதன் காரணமாக அதனை தடுத்து, மரங்களை பெருக்கும் நோக்கில் , வீட்டில் மரம் வளர்த்து பராமரிப்பவர்களுக்கு 5 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என ராஞ்சியில் நடைபெற்ற விழாவில் பேசிய […]
ஜார்கண்ட் மாநிலத்தில் குறிப்பிட்ட 33 பள்ளிகளில் ஞாயிற்று கிழமை விடுமுறை அளிக்காமல் வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்துள்ளனர். இந்தியா முழுவதும் பள்ளி கல்லூரிகள் மட்டுமின்றி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு கூட ஞாயிற்று கிழமை தான் பொது விடுமுறையாக உள்ளது. ஆனால், ஜார்கண்ட் மாநிலத்தில், தும்கா எனும் நகரில் செயல்பட்டு வந்த பள்ளிகளில் 33 பள்ளிகளில் ஞாயிற்று கிழமை விடுமுறை அளிக்காமல் வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாகி உள்ளது. இதனை தொடர்ந்து கல்வி அதிகாரிகள் […]
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள குந்தி என்னும் மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய 12 வயது சிறுவன் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக போலீசார் கூறுகையில், சிறுமி தனது வீட்டிற்கு அருகில் உள்ள கடையில் குளிர்பானம் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு தனியாக நின்று கொண்டிருந்த சிறுவன், தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக சிறுமி கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக டோர்பா காவல் நிலையத்தில் வழக்கு […]
சரியாக வரி கட்டுபவர் என்ற முறையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இத்தனை ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இப்போது ஏன் மின்வெட்டு ஏற்படுகிறது என்பதற்கான காரணத்தை அறிய விரும்புகிறேன் என தோனியின் மனைவி ட்வீட். கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் அதிகமான வெயிலின் தாக்கம் காணப்படுகிறது. இந்த கோடை காலங்களில் அனைவருமே, மின்வெட்டு ஏற்படக்கூடாது என்று தான் விரும்புவர். ஆனால், தற்போது நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் பல மாநிலங்களில் மின்வெட்டு தொடர்கிறது. அந்த வகையில், மத்திய […]
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பாகுர் எனும் மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய இருபது வயது கொண்ட பெண் ஒருவர், அப்பகுதியிலேயே வசிக்கும் ஒரு நபரை இரண்டு வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் இருவரும் வெளியில் சுற்றுவது, வீட்டிற்கு வந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. மேலும், அந்தப் பெண்ணிற்கு அவரது காதலன் ஒரு ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது காதலனுடன் கால்பந்து போட்டியை காண வெளியே சென்ற பெண், […]