தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், 18 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. எனவே, இன்னும் 24 மணி நேரத்தில் புயல் (மிக்ஜாம்) உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலானது ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிசம்பர் 5ம் தேதி கரையைக் கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் மிக்ஜாம் […]
சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையம் வந்த தாய், மகளுக்கு கொரோனா தொற்று உறுதி. சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையம் வந்த தாய், மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பி.எஃப்-7 தொற்றா என கண்டறிய சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறுகையில், சீனாவிலிருந்து வந்த 2 பேருக்கு […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத் துறை சுற்றறிக்கை. சீனா, அமெரிக்கா, தென்கொரியா ஆகிய நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் இந்த வைரஸ் பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத் துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதன்படி ஆறு […]
மதுரையில் போலி மருத்துவம் பார்த்த பெண் கைது. மதுரை மாவட்டம் ஸ்ரீராம் நகரில் யோக சரஸ்வதி என்பவர் பத்தாம் வகுப்பு தான் முடித்துள்ளார். இந்த நிலையில் இவர் அப்பகுதியில் மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இது தொடர்பாக சுகாதாரத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அதில் அவர் பத்தாம் வகுப்பு தான் படித்துள்ளார் என்பதும், போலி மருத்துவம் பார்த்ததும் உறுதியானது. இதனை எடுத்து அவரை போலீசார் […]
மகப்பேறு சிகிச்சையில் அறுவை சிகிச்சை இல்லாமல் 100 சதவீதம் சுக பிரசவம் என்பதே மகப்பேறு பிரிவின் நோக்கமாகும். – மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குகைதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு அரசு மருத்துவமனைகளின் மகப்பேறு சிகிச்சைகள் பற்றி பல்வேறு தகவல்களை கூறினார். அவர் கூறுகையில், மகப்பேறு மருத்துவ சேவையில் சிறந்த இடத்தில் தமிழகம் இருக்கிறது. சிறந்த மருத்துவ சேவையை அரசு மருத்துவமனை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டை விட […]
அரசு மருத்துவமனைகளில் செயல்பாடுகளை கண்காணிக்க பறக்கும் படை அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை அரசு மருத்துவமனையில் அண்மையில் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா, தவறான மருத்துவ சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம் அரசு மருத்துவமனைகள் சிகிச்சை குறித்த பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டன. இந்நிலையில, சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்து புதிய உத்தரவை தமிழக சுகாதாரத்துறைக்கு பிறப்பித்துள்ளது. அதன்படி, அரசு மருத்துவமனைகளில் பறக்கும் படையை அமைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், […]
பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் இன்ஃபுளூவென்சா காய்ச்சல் முன்னெச்சரிக்கை நெறிமுறைகளை அனுப்பியுள்ளார். தமிழகத்தில் தற்போது இன்ஃபுளூவென்சா காய்ச்சலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்துள்ள இந்த நேரத்தில் தான் இன்ஃபுளூவென்சா காய்ச்சல் சற்று தலை தூக்க ஆரம்பித்துள்ளது. இதனை ஆரம்பத்திலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை களத்தில் இறங்கியுள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் முன்னெச்சரிக்கை […]
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதியை காரைக்கால் மேடு மீனவ கிராமத்தில் நேற்று இரவு 3 குழந்தைகள் உட்பட 11 பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பதறிப்போன அக்கம் பக்கத்தினர், அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். விவரம் அறிந்து, அங்கு புதுசேரி சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்தனர். இந்த திடீர் வாந்தி மயக்கம் பற்றி அவர்கள் விசாரித்துள்ளனர். இதற்கிடையில் வாந்தி மயக்கம் ஏற்பட்டவர்களுக்கு காரைக்கால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் மருத்துவ குழு ஆய்வு […]
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு அறையில் தேர்வு எழுதும் போது, முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயமில்லை என சுகாதாரத்துறை அறிவிப்பு. தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து, பொதுத்தேர்வில் போது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த […]
தமிழக்தில் கொரோனாவை உறுதி செய்யும் ஆர்டி-பிசிஆர் ( RT – PCR) பரிசோதனைக்கான கட்டணம் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பரிசோதனை கட்டணம் குறைப்பு: அதன்படி, முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் ஆய்வகங்கள், மருத்துவமனைகளில் பரிசோதனை கட்டணம் ரூ.400லிருந்து ரூ.250ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல முதல்வரின் மருத்துவ காப்பீடு பெறாதவர்களுக்கான பரிசோதனை கட்டணம் ரூ.700லிருந்து ரூ.400ஆக குறைக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக […]
புதுச்சேரி:முதல் முறையாக 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில்,இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 578 ஆக இருந்த நிலையில்,இன்று 653 ஆக உயர்ந்துள்ளதாகவும், அதில் 186 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும்,மீதமுள்ள 467 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில்,முதல் முறையாக 2 பேருக்கு ஒமைக்ரான் […]
கோவை சுகாதாரத் துறையில் பணிபுரிய தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார குழுமத்தில், செயல்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் மூலம் District Quality Consultant-1, IT Co-ordinator (L.IMS)-1, Biock Account Assistant- 1, Labour Mobile Medical Unit Driver-1, Labour Mobile Medical attender cum cleaner-1, போன்ற பணியிடங்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தொாகுப்பூதியத்தில் மாவட்ட நல சங்கம் […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா அச்சத்தால் மருத்துவமனைகளில் நோயாளிகளை உள்ள எடுப்பதற்கு பயந்து தங்களது மருத்துவமனை நிர்வாகம் மூடிவிட்டது அல்லது வெளி நோயாளிகள் புதிதாக உள்ளே வருபவர்கள் சேர்க்க மறுக்கிறது. இது குறித்து தகவல் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு தெரிய வந்த நிலையில், தற்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது வெளி நோயாளிகள் […]
தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் வெளி மாநில மாணவர்களை சேர்ப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் மொத்த காலி இடங்கள் 3,958 ஆகும். தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவக்கல்லூரிகளில் நீட் தேர்வின் மதிப்பெண் நேரடி கலந்தாய்வு மூலம் இந்த இடங்கள் நிரப்பப்படும். 2019 – 2010 கல்வி ஆண்டிற்கான மருத்துவக்கல்லூரி இடங்கள் தற்போது நிரப்பப்பட்டு வருகின்றன. கலந்தாய்வுக்கான மாணவர்கள் பட்டியல் கடந்த வாரம் வெளியானது. இதில், தமிழகம் அல்லாது அண்டை […]
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட்ட அனைத்து இடங்களும் முழுமையாய் நிறைவு பெற்றதாக சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு முடிவு கடந்த மாதம் 5 ம் தேதி வெளியான நிலையில், தமிழகத்தில் உள்ள 3,968 மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கான இடங்களுக்கு விண்ணப்பித்து அதன் படி கலந்தாய்வு நடைபெற்று வந்தது. ரேண்டம் எண் அடிப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் இதுவரை அனைத்து மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.