விழுப்புரம்:சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மற்றும் எஸ்பி மீது பாலியல் புகார் அளித்த பெண் எஸ்பி சாட்சி விசாரணைக்காக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் என்பவர் தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த ஏப்ரல் மாதம் பெண் எஸ்.பி புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உதவிய செங்கல்பட்டு எஸ்.பி ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன்,இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. […]
வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடத்த எதிர்ப்பு தெரிவித்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுபயணத்தின் போது அவரின் பாதுகாப்புப் பணியில் இருந்தார். சிறப்பு டிஜிபி தனது மாவட்டத்திற்கு வந்ததால் மரியாதை நிமித்தமாக பெண் எஸ்பி சந்தித்துள்ளார். அப்போது சிறப்பு டிஜிபி, பெண் எஸ்பியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து முன்னாள் டிஜிபி மற்றும் […]