சென்னை தாம்பரம் ப்ளூஸ்டோன் நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 16 வயது சிறுவன் கைது. சென்னை தாம்பரம் ப்ளூஸ்டோன் நகைக்கடையில், அசாமை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சிறுவன் கெளரிவாக்கத்தில் இருக்கும் ஜூஸ் கடையில் வேலை பார்த்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அச்சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் அவை அனைத்தும் மீட்கப்பட்டுள்ளது.
ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியீடு. வேலூர் தோட்டப்பாளையம் தில் உள்ள பிரபல நகைக் கடையான ஜோஸ் ஆலுக்காஸில், நேற்று பின்பக்க சுவர் வழியாக துளையிட்டு மர்ம நபர்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் நகைக்கடையை சுற்றி உள்ள சாலைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து […]