பெங்களூரு யெலஹங்காவில் குழந்தை திருமணம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 46 வயது ஆண் மற்றும் 14 வயது சிறுமியின் பெற்றோரை கைது செய்துள்ளதாக கர்நாடக போலீசார் இன்று தெரிவித்தனர். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய சிறுமி, குழந்தைகள் நலக் குழுவின் காவலுக்கு அனுப்பப்பட்டு, தற்போது பெங்களூரு வில்சன் கார்டனில் உள்ள பெண்களுக்கான அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். சிறுமியை ‘திருமணம்’ செய்தவர் சிக்கபெத்தஹள்ளியைச் சேர்ந்த நில உரிமையாளர் என்.குருபிரசாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் தினக்கூலி […]
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தரவுகளின்படி,கடந்த 2020 ஆம் ஆண்டில் குழந்தை திருமண வழக்குகள் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்தியாவில் குழந்தை திருமண வழக்குகள் கடந்த 2019 ஆம் ஆண்டை விட 2020 ஆம் ஆண்டில் சுமார் 50 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக சமீபத்திய தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) தரவுகளின்படி நிபுணர்கள் கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்,என்சிஆர்பி தரவுகளின்படி, குழந்தை திருமணத் தடைச் சட்டத்தின் கீழ் மொத்தம் 785 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.பதிவு […]
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், ராஜஸ்தானில் குழந்தை திருமணங்களை பதிவு செய்வதற்கான மசோதாவை ராஜஸ்தான் சட்டசபை நிறைவேற்றியுள்ளது. ராஜஸ்தான் சட்டசபை வெள்ளிக்கிழமை குழந்தை திருமணங்கள் உட்பட திருமணங்கள் அனைத்தும் கட்டாயமாக பதிவு செய்வதற்கான 2009 சட்டத்தை திருத்தும் மசோதாவை 2021 இல் நிறைவேற்றியது. இதனால் பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர் மற்றும் குழந்தை திருமணங்களை பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று […]
தனது வயதான மகனுக்கு 17 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்த தாய்.சிறுமி அளித்த புகார். மகன் உட்பட நாலுபேர் கைது.தலைமறைவான தாயிற்கு வலைவீச்சு. கரூர் மாவட்டத்தில் வசித்து வந்தவர் ஜெயலட்சுமணன் ஆவார்.இவருக்கு இவரின் பெற்றோர் திருமணம் செய்து வைக்க எண்ணியுள்ளனர்.ஆனால் அவருக்கோ வயது தொடர்ந்து ஏறிக்கொண்டே இருந்துள்ளது. மேலும் அவருக்கு வயது அதிகம் ஆகிவிட்டதால் பலரும் பெண் தர மறுத்துள்ளனர். இந்நிலையில் எப்படியாவது திருமணம் செய்து வைக்க விரும்பிய ஜெயலட்சுமணனின் தாயார் நல்லம்மாள் 17 வயது […]