பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் இன்று 8 மணி அளவில் தொடங்கியது. பாகிஸ்தானில் உள்ள, பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று 2 குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் நேற்று வரை 25 பேர் பலியாகி இருந்தார்கள் என வெளிவந்தது. ஆனால் தற்போது பலி எணிக்கை 30 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 42 பேர் காயமடைந்துள்ளனர். முதல் குண்டுவெடிப்பானது பிஷின் மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளர் அஸ்பன்டியார் கான் கக்கரின் அலுவலகத்திற்கு வெளியே வெடித்துள்ளது. இந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 17 பேர் […]
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் பலுசிஸ்தான் மாகாணத்தில் 2 குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது . இதில் இதுவரை 25 பேர் பலியாகியுள்ளனர். 42 பேர் காயமடைந்துள்ளனர். முதல் குண்டுவெடிப்பானது பிஷின் மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளர் அஸ்பன்டியார் கான் கக்கரின் அலுவலகத்திற்கு வெளியே சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 17 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். துப்பாக்கி முனையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரரிடம் மர்ம நபர்கள் கைவரிசை.! அடுத்ததாக, கில்லா அப்துல்லா […]
சோமாலியா தலைநகரில் முக்கிய அரசாங்க அலுவலகங்களுக்கு அருகில் உள்ள பரபரப்பான சந்திப்பில் சனிக்கிழமை இரண்டு வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.இந்த சம்பவத்தில் பொதுமக்களில் 12 பேர் இறந்ததாகவும் ,20 பேர் காயமுற்றுள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சோமாலியாவின் தலைநகரில் முக்கிய அரசாங்க அலுவலகங்களுக்கு அருகில் உள்ள பரபரப்பான சந்திப்பில் சனிக்கிழமை இரண்டு கார் குண்டுகள் வெடித்துள்ளது.இரண்டாவது குண்டுவெடிப்பு ஒரு பரபரப்பான உணவகத்தின் முன் நிகழ்ந்துள்ளது. ஆமின் ஆம்புலன்ஸ் சேவையின் இயக்குனர், பல காயமடைந்த மற்றும் கொல்லப்பட்டவர்களை சேகரித்ததாக கூறினார். […]
இஸ்லாமியர்களின் புனித மாதமான இந்த ரமலான் மாதத்தில் மசூதிகளில் தொடர்ச்சியாக தொழுகைகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆப்கானிஸ்தான் தலைநகராகிய காபூல் பகுதியில் உள்ள கலிபா சாஹிப் மசூதியில் நேற்று தொழுகை நடை பெற்றுள்ளது. இந்த தொழுகையில் முஸ்லிம்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். அப்பொழுது அங்கிருந்த முஸ்லிம்களை குறிவைத்து சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. […]
ஆப்கானிஸ்தானில் உள்ள மசார்-இ-ஷரீப் நகரில் உள்ள மசூதி ஒன்றில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அபு அலி சினா-இ-பால்கி மாவட்ட மருத்துவமனையின் தலைவர் கௌசுதின் அன்வாரி கூறுகையில், இந்த குண்டு வெடிப்பின் போது கிட்டத்தட்ட 65 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன், 5 பேர் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளார்.
உதம்பூர் தாசில்தார் அலுவலகம் அருகே ரெஹ்ரி பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 13 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த குண்டுவெடிப்பிற்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாகூரில் அனார்கலி பஜார் என்ற இடத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 பேர் உயிரிழப்பு. இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் உள்ள லாகூரில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அனார்கலி பஜார் என்ற வணிகநகரமான லாகூரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. #BREAKING #Blast in #Lahore 3 people […]
ஆப்கானிஸ்தானில் உள்ள பள்ளியில் நடந்த குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை தற்போது 7 ஆக அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள கிழக்கு மாகாணமான கோஸ்டில் இருக்கும் மதப்பள்ளி ஒன்றில் கையெறி குண்டு வெடித்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் 15 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காபூல் மசூதி அருகே குண்டுவெடிப்பு நிகழ்வில் பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் ஆட்சி புரிந்து வரும் தலிபான்கள்,எல்லைகளுக்கு குறிப்பாக பதாக்ஷான் மாகாணத்தில் தற்கொலை படையை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதி செய்யும் வகையில்,தற்கொலை படைக்கு லஷ்கர்-இ-மன்சூரி (‘மன்சூர் இராணுவம்’) என்று பெயரிடப்பட்டு,நாட்டின் எல்லைகளுக்கு அனுப்பப்படும் என்று பதாக்ஷான் மாகாணத்தின் துணை ஆளுநர் முல்லா நிசார் அஹ்மத் அஹ்மதி முன்னதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில்,ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஈத் காஹ் மசூதியின் […]
ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த அடுத்தடுத்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 21 பேர் காயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் மற்றும் அந்நாட்டிலிருந்த பிற நாட்டு மக்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி உள்ளனர். இதனையடுத்து, ஆப்கானிஸ்தான் காபூல் நகரில் உள்ள பி.டி.13 பகுதியில் சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்று நேற்று வெடித்தது. இந்த சம்பவத்தில் 2 பேர் […]