ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்த விவகாரத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. சென்னை, தேனாம்பேட்டையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கருமுட்டை விற்பனை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 4 மருத்துவமனைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்படும் . 4 மருத்துவமனைகளிலும் 15 நாட்களுக்குள் உள்நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என […]
ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து,பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் உள்ளிட்ட 4 பேர் ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து,சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில்,சேலம், ஓசூர் மருத்துவமனைகளுக்கு ஈரோடு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. மேலும்,ஒவ்வொரு மருத்துவமனையிலும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில்,சிறுமியின் வாக்குமூலத்தையடுத்து ஆந்திரா,கேரளா மருத்துவமனைகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்பின்னர்,கருமுட்டை விற்பனை வழக்கில் விசாரணை விரைந்து நடைபெற்று வருகிறது என்றும் விசாரணை முடிந்து அறிக்கை அளித்த […]