போக்குவரத்து துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள சிவசங்கர் இன்று தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு பதவியேற்கிறார். அமைச்சர் ராஜகண்ணப்பன் முதுகளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதி பெயரை கூறி பேசியதாக புகார் எழுந்த நிலையில், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அதேநேரத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ். சிவசங்கர் போக்குவரத்துத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று ராஜகண்ணப்பன், சிவசங்கரின் துறைகளை மாற்றி தமிழக ஆளுநர் ஒப்புதல் […]
முதல் பட்டதாரி என்பதற்குப் பதிலாக ” முதல் தலைமுறை பட்டதாரி” என்று நிபந்தனைகளில் மாற்றம் செய்யப்படும் என அமைச்சர் அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவையில் பேசிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களின் கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கான வருமான வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார். 259 கல்லூரி விடுதிகளில் ரூ.2.59 கோடியில் செம்மொழி நூலகம் அமைக்கப்படும் என்றும் இடஒதுக்கீடு மற்றும் சமூகநீதி குறித்து ரூ.5 […]