MK Stalin : கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பாஜக, ஒரு செங்கலை தாண்டி வேறு ஒன்றும் செய்யவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், தேர்தல் பிரச்சார வேலைகளில் அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் நான் அனைவரும் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலை நடத்தும் பணிகளிலும் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். அதில். […]
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடலில் என்ன பிரச்சனை என்பது குறித்த செய்திகள் வெளியாகவில்லை.
இமாச்சல பிரதேசத்தில் இன்று எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இன்று இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். பிலாஸ்பூரில் சுமார் 1,470 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கிறார். பின்னர் லுஹ்னு மைதானத்துக்கு செல்லும் அவர், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதனை தொடர்ந்து, பிரதமர், பிற்பகல் 3.15 மணிக்கு குலு மைதானத்தில் நடைபெறும் தசரா கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள […]
பாஜக தொண்டர்கள் களத்திற்கு வந்தால் என்ன நடக்கும் எனபதை கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் பாஜக அமைதியை விரும்பக்கூடிய கட்சி என அண்ணாமலை பேட்டி. கோவையில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு, பொதுச்சொத்துக்கள் சேதம் என தொடர்ந்து பதற்றமான நிலை காணப்படுகிறது. இதனையடுத்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில் பாஜக முக்கிய நிர்வாகிகள் காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபுவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தலைவர்அண்ணாமலை, கடந்த இரு நாட்களாக […]
எய்ம்ஸ் மருத்துவமனையின் உண்மையான நிலவரம் என்னவென்றால், ‘வெச்ச செங்கலை கூட காணவில்லை’ என்கின்ற நிலைமையில் தான் உள்ளது என சு.வெங்கடேசன் எம்.பி பேட்டி. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு 1,264 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான வேலைகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. விரைவில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பார் என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து, 95 சதவீத பணிகள் […]
கீழ்வானம் வரை மதுரை கிழவி வெற்றிபோட்டு துப்பிய எச்சிலால் சிவந்து கிடந்தது நிலம் என எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு 1,264 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான வேலைகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. விரைவில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பார் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சு.வெங்கடேசன் எம்.பி […]
எய்ம்ஸ் மருத்துவமனை டிசைன் இரண்டு மாதத்தில் தயாராகி விடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. சபரிமலா ஐயப்பா சேவா சமாஜம் நடத்திய ஹரிவராசனம் நூற்றாண்டு தேசிய சமிதி விழா சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான். இதையே தான் சனாதன தர்மமும் சொல்கிறது. நாட்டின் பொருளாதாரம், ராணுவ வளர்ச்சியடைவை போல் ஆன்மீகத்திலும் […]
உத்தரபிரதேசம்:கோரக்பூரில் முக்கிய வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,இன்று,கிழக்கு உ.பி.யின் மிக முக்கியமான நகரங்கள் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த ஊரான கோரக்பூரில் ரூ.9600 கோடி மதிப்பிலான 3 பெரிய திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மேலும்,பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். PM Narendra […]
தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏன் நிதிஇல்லை? அண்ணாமலையாருக்கு மட்டுமே தெரியும் என பீட்டர் அல்போன்ஸ் ட்வீட். பிரதான் மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா (பிஎம்எஸ்எஸ்ஒய்) திட்டம் கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 22 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 2018 இல் மதுரை தோப்பூரில் அமைக்க இடம் தேர்வு செய்து 2019 ஜனவரி 27 இல் அடிக்கல் […]
வெங்கடேசன் எம்.பி அவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். வெங்கடேசன் எம்.பி அவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 150 மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி தரும் வாய்ப்பை தமிழ்நாடு அரசு ஏன் மறுக்க வேண்டும் என்று கண்ணீர் வடித்துள்ளார். குடம் குடமாக கொட்டும் இந்த கண்ணீரில் சிறு துளியேனும் அனிதாவுக்காகவோ, தனுசுக்காகவோ, கனிமொழிக்காகலோ கசிந்திருந்தால், சற்றேனும் […]
1998 முதல் 2004ஆம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய்(வயது 93), முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். உடல்நிலை ஒத்துழைக்காததால் பொது வெளியில் எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை. வாஜ்பாயின் உடல்நிலை, நேற்று மதியம் மோசமடைந்தது. இதனால், அவரை உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு டாக்டர் ரன்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், வாஜ்பாயின் உடல்நிலை சீராக […]
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து இரண்டு மாதத்துக்குள் தெளிவான முடிவு எட்டப்படும் என மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் ((சௌபே)) தெரிவித்துள்ளார். சென்னை போரூரில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் ((சௌபே)) தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் பல்வேறு சிக்கல்கள் நீடிப்பதாகத் தெரிவித்தார். எந்த இடத்தில் எய்ம்ஸ் அமைக்கலாம் எனத் தமிழக அரசு தெரிவித்த உடனே அதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கும் எனக் குறிப்பிட்டார். நல்ல போக்குவரத்து வசதியுடன் […]