எம்.எல்.ஏக்கள் , எம்.பிக்கள் மீதான நிலுவையில் உள்ள வழக்கு விசாரணை விவரங்களை உச்சநீதிமன்றத்தில், உயர்நீதிமன்றங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடுமையான குற்றங்கள் செய்தவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்பாய் பொதுநல வழக்கு தொடுத்து இருந்தார். இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதி அமர்வு, இதுவரை 5 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் […]
மத்திய அமைச்சர் அமித்ஷாவை தமிழக அனைத்து கட்சி எம்.பிக்கள் இன்று சந்திக்க உள்ளனர். தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக ஏழு பேர் கொண்ட தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் குழு முயற்சி மேற்கொண்டது. ஆனால் தமிழக எம்.பிக்களுக்கு மத்திய அமைச்சர் சந்தித்து பேச நேரம் வழங்கவில்லை. இதற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்த நிலையில், […]