₹1,000 செலுத்தத் தவறியதால் கர்ப்பிணிப் பெண்ணை உத்திர பிரதேச சாலையில் விட்டுச் சென்ற ஆம்புலன்ஸ். உத்திரபிரதேசத்தில் கர்ப்பிணிப் பெண்ணின் குடும்பத்தினரிடம் ஆம்புலன்ஸிற்கு பணம் செலுத்த போதிய பணம் இல்லாததால் ஆம்புலன்ஸ் டிரைவர் கர்ப்பிணிப் பெண்ணை சாலையில் விட்டுச் சென்ற சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், கர்ப்பிணிப் பெண் சாலையில் அமர்ந்திருப்பதைக் காணலாம், அவரது குடும்பத்தினர் அவருக்கு உதவ முயற்சிக்கிறார்கள். மேலும் அந்த ஆம்புலன்ஸ் விட்டு செலாவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. குடும்பத்தினர் ₹1,000 செலுத்தத் தவறியதால் […]
உத்திரபிரதேசத்தில் பாலியா பகுதியில் கொரோனா தடுப்பூசி போட மறுத்து, மரத்தின் மேல் ஏறிய நபரை சமாதானப்படுத்தி தடுப்பூசி போட்ட சுகாதாரத்துறை ஊழியர்கள். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உத்திரபிரதேசத்தில் பாலியா பகுதியில் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக கிராமங்களுக்கு சென்றுள்ளனர். அப்போது ஒருநபர் […]
உத்திர பிரதேச(உ.பி) மாநிலம் லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா கடிதம் எழுதியுள்ளது. உத்திரபிரதேசம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அமைச்சர் மகனின் கார் மோதி 2 விவசாயிகள் உயிரிழந்தனர்.இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்தனர்.இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில்,உத்திர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு சம்யுக்தா கிசான் […]
உ.பி-யில் பாஜக தலைவருக்கு 5 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக வழங்கப்பட்ட சான்றிதழ். உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ராம்பால் சிங் (73), பூத் எண் 79 இன் பிஜேபி தலைவர் மற்றும் இந்து யுவ வாஹினியின் உறுப்பினரும் ஆவார். இவர் தனது தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்துள்ளார். அந்த சான்றிதழில், அவர் 5 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகவும், 6-வது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான தேதியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இது தொடர்பாக அவர், சான்றிதழில் அவருக்கு ஐந்து […]
உத்தரப்பிரதேசத்தில் பள்ளி பொதுத் தேர்வக்காக ஜி.பி. நகர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த தடையானது 2 மாத காலத்திற்கு நீடிக்கும் துணை போலீஸ் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பள்ளி பொதுத் தேர்வுகள் (சனிக்கிழமை) அன்று தொடங்கியது.இந்நிலையில் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றது.பொதுததேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாவகையில் ஜி.பி. நகர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ‘மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் குறிப்பிட்ட பகுதியில் […]
உத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மதிய உணவு வாங்கச்சென்ற இடத்தில் 3 வயது இளம்பிஞ்சு பலி கொதித்த குளம்பால் நடந்த பரிதாப நிகழ்வு இந்த அதிர்ச்சி சம்பவம் ஆனது உத்தரப் பிரதேச மாநிலம், மிா்ஸாபூா் மாவட்டத்தில் நடந்துள்ளது. அங்கு இயங்கி வரும் அரசு தொடக்க பள்ளியில் மதிய உணவு தயாரித்து வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் தவறி விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்ததுள்ளது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியா் சுஷீல் குமாா் படேல் கூறுகையில் ராம்பூா் […]
விஷ்வ இந்து மகாசபா அமைப்பின் மாநில தலைவர் ரஞ்சித் பச்சன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் இந்த கொலையானது நடந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் விஷ்வ இந்து மகாசபா அமைப்பின் மாநில தலைவர் ரஞ்சித் பச்சன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லக்னோ ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் நேற்று காலை அவர் தனது சகோதரருடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது இருசக்கர மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் பலமுறை […]
நண்பனின் மனைவி மீது கொண்ட மோகத்தால் நான்கு இளைஞர்கள் செய்த சதி. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றன. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி அருகே அமைந்துள்ள சிரோலி கிராமத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் தனது நண்பனின் மனைவியை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்று நீண்ட நாள்களாக மோகம் கொண்டுள்ளனர். கண்ணனுக்கு லச்சணமாக தெரியும் நண்பரின் மனைவி மீது கொண்ட மோகம் நாளடைவில் அது காம வெறியாக மாறியுள்ளது.அந்த பெண்ணை […]
ஆப்பரேசன் தியேட்டருக்குள் நுழைந்த தெரு நாய் பிறந்த குழந்தையை கடித்து கொதறியதில் குழந்தை மரணம். மருத்துவமனையின் கவன குறைவால் நேர்ந்த கொடுமையின் காரணமாக காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர். உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோரக்பூரை அடுத்து உள்ள ஃபருகாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் ஆவார் .இவருடைய மனைவி காஞ்சன் ஆவார்.இவருக்கு சில நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விகாஸ் காலனியில் உள்ள ஆகாஷ் கங்கா என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு காஞ்சனை […]
பிரியாணி விற்பனை செய்தவரை ஜாதியின் பெயரை கூறி 3 நபர்கள் பலமாக தாக்கியுள்ளனர். வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து மர்ம கும்பலை காவல்துறையினர் தேடிவருகின்றன. உத்திரபிரதேசம் மாநிலத்தில் கிரேட்டர் நொய்டா பகுதியில் 43 வயதை சேர்ந்த நபர் ஒருவர் பிரியாணி கடை நடத்தி வந்துள்ளார்.இந்நிலையில் வழக்கம்போல் அவர் பிரியாணி விற்பனை செய்து வந்த போது அப்பகுதியை சேர்ந்த 3 நபர் திடீரென தாக்கியுள்ளனர். அதற்கு அவர் எதற்கு அடிக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.அப்போது அவர்கள் என்க ஏரியாவில் […]
உத்தியப்பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. உத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஃபெதாபூர் மாவட்டத்தில் வீட்டில் தனது மகளை உறவினர் மகன் பலாத்காரம் செய்து தீவைத்து எரித்ததாக பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இளம்பெண்ணுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.அவருக்கு 22 வயதாகிறது .இந்த விவகாரம் இரண்டு வீட்டிற்கும் தெரியவந்துள்ளது.உடனே பஞ்சாயத்து கூட்டியுள்ளனர். அந்த கிராம […]
2014-ம் ஆண்டிலிருந்து பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுவதை தொடர்ந்து இஸ்லாமிய மக்கள் மீது ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பல பிரமுகர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.இந்நிலையில் தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சண்டாவுளி மாவட்டத்தில் முகமது காலித் என்ற 15 வயது சிறுவன் தீக்காயங்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அந்த சிறுவன் இறப்பதற்கு முன்பு நான்கு நபர்கள் […]
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தில் வாழ்ந்து வந்தவர் பிரதீப்.அங்கு இவர் தமது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் இருந்துள்ளார்.இவர் ஒரு பயங்கரமான குடிகாரன் என்று அங்குள்ளவர்கள் சொல்கின்றன. இவருக்கு தமது மனைவிக்கும் வேறு ஒரு நபருக்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் அதிகமாகவே இருந்துள்ளது.அதன் காரணமாக அடிக்கடி மனைவியிடம் சண்டை போட்டவாறே இருந்துள்ளார். ஆனாலும் அவரின் சந்தேகம் ஓய்தவாறு இல்லை.என்னசெய்வது என்று தீவிரமாக யோசித்து கொலை செய்துவிடலாம் என்று முடிவு செய்து கடந்த புதன் கிழமை […]
உத்திரபிரதேசத்தில் ஒரு பெண் கடைக்கு சென்றுவிட்டு வரும்பொழுது அங்குள்ள இளைஞர்களால் தடுத்துநிறுத்தப்பட்டு அவளிடம் உள்ள சைக்கிளை பறிக்கின்றனர் பின்னர் கிண்டல் செய்தும் ,கொச்சைவார்த்தைகளால் பேசியும் அவளைவிடாமல் தடுக்கின்றனர் ,எவ்ளவோ போரடிப்பார்த்தும் அவர்களிடம் இருந்து சைக்கிளை பெறமுடியாததால் அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டாள் அந்த பெண் , இந்த காணொளி இணையதளத்தில் வைரலாக வருகிறது .
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் கணேஷ் சங்கர் வித்யார்த்தி மருத்துவ கல்லூரி உள்ளது. இக்கல்லூரியின் கீழ் லாலா லஜ்பத் ராய் என்கிற மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில், அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதியவர்கள் 5 பேர் அடுத்தடுத்து உயிர் இழந்தனர். 2 நாட்களில் 5 முதியவர்கள் உயிர் இழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவில் உள்ள ஏ.சி. எந்திரம் கடந்த சில தினங்களாக வேலை செய்யவில்லை என்றும், […]
சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு (ஐஎஸ்எஸ்எப்) சார்பில் ஜெர்மனியின் சுகல் நகரில் வரும் 22-ம் தேதி ஜூனியர் உலகக் கோப்பை போட்டி தொடங்க உள்ளது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்பதற்கு, உத்தர பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த பிரியா சிங் (வயது 19) தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்க காத்திருக்கும் பிரியா சிங்கின் குடும்பம் ஏழ்மை நிலையில் இருப்பதால், அவரால் ஜெர்மனி சென்று தங்கியிருந்து போட்டியில் பங்கேற்க முடியாத […]
உத்தரப்பிரதேசம் ; காந்தியவாதியும், சமூக ஆர்வலரும், ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் சட்டம் தேவை என வலியுறுத்தி வருபவருமான அன்னா ஹசாரே உத்தரப்பிரதேசம் மாநிலம், சம்பல் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் மகா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரையாற்றினார். பெருகிவரும் விவசாயிகள் தற்கொலைக்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் மற்றும் நாட்டில் தற்போது விவசாயிகளின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாகவும் மற்றும் மோசமாகவும் உள்ளதாக குறிப்பிட்ட ஹசாரே மேலும் விவசாயிகளின் பிரச்சனைகளை ஆராய வேண்டும் என்று கூறினார், விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதற்கு […]