Maha Shivratri: நியூயார்க் டைம்ஸ் சதுக்க திரையில் ஈஷா மஹாசிவராத்திரி வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த நியூயார்க் நகரவாசிகள் “ஹர ஹர மகாதேவ்” என்ற பாடலுக்கு ஆடி மகிழ்ந்தனர். கடந்த திங்கட்கிழமை இரவு, “சத்குருவுடன் மஹாசிவராத்திரியின் மகிழ்வான காணொளி – உலகில் அதிகம் பார்க்கப்பட்ட மஹாசிவராத்திரி நிகழ்வு” என்ற செய்தி நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தின் திரைகளை ஒளிரச் செய்தது. இது குறித்த வீடியோவை சத்குரு அவர்கள் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். #TimesSquare, New York […]
குடியரசு துணைத் தலைவர் திரு.ஜெகதீப் தன்கர் பங்கேற்பு Shivratri 2024: உலகின் மிகப் பிரம்மாண்டமான மஹாசிவராத்திரி விழா கோவை ஈஷா யோக மையத்தில் வரும் 8-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் மாண்புமிகு இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு. ஜெகதீப் தன்கர் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். மஹாசிவராத்திரி என்பது ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் ஆகும். இந்த இரவில் நிகழும் கோள்களின் அமைப்பு மனித உடலில் இருக்கும் […]
மார்ச் 8-ல் ஈஷாவில் கோலாகலம் Maha Shivratri: உலகின் மிகப் பிரம்மாண்டமான மஹாசிவராத்திரி விழா கோவை ஈஷா யோக மையத்தில் வரும் 8-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகள் முழு தீவிரத்தில் நடைபெற்று வருகின்றன. மஹாசிவராத்திரி என்பது ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் ஆகும். இந்த இரவில் நிகழும் கோள்களின் அமைப்பு மனித உடலில் இருக்கும் உயிர் சக்தி இயற்கையாகவே மேல்நோக்கி செல்வதற்கு உதவி புரிகிறது. […]
மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் பிப்.26-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை ஆதியோகி ரத யாத்திரை கோவையில் நடைபெற உள்ளது. இந்த யாத்திரையின் மூலம் பக்தர்கள் தங்கள் வீட்டின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அவரின் அருளை பெற முடியும். கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில் 30-வது ஆண்டு மஹாசிவராத்திரி விழா வரும் மார்ச் 8-ம் தேதி மிக கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி, இவ்விழாவில் பங்கேற்க […]
நல்ல மழைக்கு ஈஷா வழங்கியிருக்கும் 8 கோடி மரங்களும் ஒரு காரணம் என காவேரி கூக்குரல் இயக்க விழாவில் தமிழக விவசாய சங்க தலைவர் பாராட்டு. காவேரி கூக்குரல் இயக்கமும் கோவை கட்டுனர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கம் இணைந்து கோவையைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக இரண்டாம் தவணையாக 1 லட்சம் மரங்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. காவேரி கூக்குரல் இயக்கத்தின் நோக்கம் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நடுவதாகும். […]
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஈஷா சார்பில் 4 லட்சம் கே.என் 95 முக கவசங்கள் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு.மா. சுப்பிரமணியன் அவர்களிடம் இன்று (ஜூலை 21) வழங்கப்பட்டது. சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் முக கவசங்களை ஈஷா தன்னார்வலர்கள் அமைச்சரிடம் வழங்கினர். பின்னர் அவர் அவற்றை அனைத்து மாவட்ட சுகாதார துறையினருக்கும் பிரித்து வழங்கினார். இது தொடர்பாக அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “4 லட்சம் […]
தேசிய அளவில் நடந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் 2 வெண்கல பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமைச் சேர்த்துள்ளனர். இந்தியாவில் விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்கவும்,திறமை வாய்ந்த இளம் விளையாட்டு வீரர்களை கண்டறியவும் கேலோ இந்தியா போட்டிகள் நடத்தப்படுகின்றன.அதன்படி, 2021-ம் ஆண்டிற்கான போட்டிகள் ஹரியானாவில் உள்ள பஞ்சகுலாவில் இம்மாதம் நடத்தப்பட்டன.25 வகையான விளையாட்டு போட்டிகளில் பாரம்பரிய தற்காப்பு கலையான களரிப் போட்டியும் நடத்தப்பட்டது.இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 180 இளம் வீரர்கள் பங்கேற்றனர். […]
தியானலிங்க கருவறையில் காலை 6 மணிக்கு ஈஷா பிரம்மச்சாரிகளின் ‘அம் நமசிவாய’ மந்திர உச்சாடனையுடன் பிரதிஷ்டை தின நிகழ்வு தொடங்கியது. கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தியானலிங்கத்தில் 23-வது ஆண்டு பிரதிஷ்டை தினம் இன்று (ஜூன் 24) அனுசரிக்கப்பட்டது. இதில் கடந்த ஆண்டுகளைப் போலவே இந்து, பௌத்த மதங்களின் மந்திர உச்சாடனங்கள் மற்றும் கிறிஸ்துவ, சூஃபி பாடல்கள் இசை வடிவில் அர்ப்பணிக்கப்பட்டன. தியானலிங்க கருவறையில் காலை 6 மணிக்கு ஈஷா பிரம்மச்சாரிகளின் ‘அம் நமசிவாய’ மந்திர […]
சமவெளியில் மிளகு சாதியம் என்பதை தமிழகம் முழுவதும் எடுத்துச் செல்லும் ஈஷா. இன்று 19-06.22 புதுக்கோட்டை ஆலங்குடியில் உள்ள வடகாடு கிராமத்தில் சமவெளியில் மிளகு சாகுபடி சாத்தியமே என்ற கருத்தரங்கு மற்றும் களப் பயிற்சி ஈஷாவின் காவேரி குரல் இயக்கம் சார்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்குபெற்றனர். மிளகு சாகுபடி மலை பகுதியில் மட்டுமல்லாது சமவெளியிலும் சாத்தியம் என்பதை புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுக்காவை சேர்ந்த பல விவசாயிகள் நிரூபித்துள்ளனர். முக்கியமாக பல வருடங்களாக […]
‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தானை கமாண்டிங் ஆஃபிசர் அசோக் ராய் தொடங்கி வைத்தார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் கோவையில் (ஜூன் 5) நடைபெற்றது.ஐ.என்.எஸ் அக்ரானியின் கமாண்டிங் ஆஃபிசர் காமோடர் அசோக் ராய் அவர்கள் கொடியசைத்து மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.இதில் பள்ளி,கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.வ.உ.சி பூங்கா அருகில் உள்ள ஆர்.கே. ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு […]
நம் தாய் மண்ணை காப்பாற்ற தமிழ் மக்கள் அனைவரும் இந்த தமிழ் புத்தாண்டில் உறுதி எடுக்க வேண்டும் ஈஷா நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார். “நம் தாய் மண்ணை காப்பாற்ற தமிழ் மக்கள் அனைவரும் இந்த தமிழ் புத்தாண்டில் உறுதி எடுக்க வேண்டும்” என்று ஈஷா நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் சத்குரு கூறியுள்ளதாவது: தமிழ் மக்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நம் தேசம் சுதந்திரம் […]
ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் ஏழை மாணவர்கள் உயர் கல்வியை தொடர்வதற்காக ஈஷா அவுட்ரீச் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. பட்ட படிப்பு: தாணிக்கண்டி,முள்ளாங்காடு,பட்டியார் கோவில்பதி,மடக்காடு, மத்வராயபுரம்,ஆலாந்துறை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 23 மாணவிகள் மற்றும் 4 மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.இதில் பாதிக்கும் மேற்பட்டோர் மலைவாழ் பழங்குடி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், அரசுப் பள்ளிகளில் படித்த இம்மாணவர்கள் ஈஷாவின் உதவியுடன் பொறியியல், நர்சிங், கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் […]
மண் வளத்தை பாதுகாக்க சர்வதேச அமைப்புகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஐ.நா சுற்றுச்சூழல் சபையின் மாநாட்டில் ஈஷா அவுட்ரீச் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. யூரி ஜெயின் வலியுறுத்தினார். ஐ.நா சுற்றுச்சூழல் சபையில் (UNEA) ‘பூமி மீதான நம்பிக்கை’ என்ற தலைப்பில் சர்வதேச கலந்துரையாடல் நிகழ்வுகள் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் உரை நிகழ்த்த ஐ.நாவின் அங்கீகாரம் பெற்ற ஈஷா அவுட்ரீச் அமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி, அதன் […]
கோவை:ஈஷாவில் இன்று மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டம். ருத்ராட்சத்தை வீட்டிலேயே இலவசமாக பெற்று கொள்ளலாம். கோவை ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா இன்று (மார்ச் 1-ம் தேதி) ஆதியோகி முன்பு மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.இதனிடையே, ஆதியோகியின் அருளை பெறும் விதமாக சத்குருவால் சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சங்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. ருத்ராட்ச பிரசாதத்தை வீட்டிலேயே பெறுவதற்கு 83000 83000 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.ருத்ராட்சத்துடன் சேர்த்து தியானலிங்கத்தில் வைத்து சக்தியூட்டப்பட்ட விபூதி, பயத்தை நீக்கி, ஒருவரின் […]
கோவை ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா வரும் மார்ச் 1-ம் தேதி ஆதியோகி முன்பு மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. ஆதியோகியின் அருளை பெறும் விதமாக சத்குருவால் சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சங்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. ருத்ராட்ச பிரசாதத்தை வீட்டிலேயே பெறுவதற்கு 83000 83000 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். ருத்ராட்சத்துடன் சேர்த்து தியானலிங்கத்தில் வைத்து சக்தியூட்டப்பட்ட விபூதி, பயத்தை நீக்கி, ஒருவரின் குறிக்கோளை நிறைவேற்ற உதவும் அபய சூத்ரா, ஆதியோகியின் புகைப்படம் ஆகியவை இல்லத்திற்கு […]
இந்தியாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதுகுறித்து களப் பணி மற்றும் கலந்துரையாடல்களை நடத்தவும் ஈஷா அவுட்ரீச் அமைப்புடன் ஐ.நாவின் உலக உணவு அமைப்பு (UN World Food Programme- WFP) புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த அமைப்பு 2020-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற பெருமைக்குரியது என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறுகையில், “ஐ.நா. அமைப்புகளும், உலகில் உள்ள ஒவ்வொரு பொறுப்பான விஞ்ஞானிகளும் இப்போது […]
ஈஷா சார்பில் தமிழ்நாடு முழுவதும் 150 இடங்களில் இலவச யோகா வகுப்புகளில் ஜனவரி 2, 3 தேதிகளில் நேரில் பங்கேற்கலாம். ஆரோக்கியமான, ஆனந்தமான தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைவருக்கும் இலவசமாக யோகா கற்றுக்கொடுக்கப்பட உள்ளது. அதன்படி, வரும் ஜனவரி 2, 3 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் சுமார் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச யோகா வகுப்புகள் நடைபெற உள்ளது. ஈஷா யோகா மையத்தால் பயிற்சி அளிக்கப்பட்ட ஈஷா தன்னார்வலர்கள் இவ்வகுப்பை […]