காமன்வெல்த் தொடரில் பங்கேற்க சென்ற இந்திய மகளிர் அணியை சேர்ந்த ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இங்கிலாந்தில் வரும் (ஜூலை) 28ஆம் தேதி முதல் காமன் வெல்த் போட்டிகளை நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் இங்கிலாந்து, பர்மிங்காமிற்கு கிளம்பினர். அப்போது, வழக்கம் போல, கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், இந்திய மகளிர் அணியை சேர்ந்த ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை பிசிசிஐ தலைவர் சவ்ரவ் கங்குலி உறுதிப்படுத்தினார். […]