தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு அவர் கலந்துகொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி,நாளை ராணிப்பேட்டை மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக முதல்வர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும்,நாளை மறுநாள் முதல்வர் இருந்த திருப்பத்தூர்,வேலூர் மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன எனவும்,இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
நாட்டுப்புற கலைகளை அரசு நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக்க நடவடிக்கை மேற்கொள்ள என தமிழ்நாடு அரசு உத்தரவு. நாட்டுப்புற கலைகளை அரசு நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக்க நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு விழாக்கள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நடத்தும் பண்பாட்டு நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற கலைகளை சேர்க்க நடவடிக்கை எடுக்க ஆணையிட்டு அரசாணையை வெளியிட்டுள்ளது. ஆலைகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் நடைபெறும் விழாக்களிலும் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடத்த ஆணையிட்டுள்ளது. நாட்டுப்புற கலைகளை அரசு நிகழ்ச்சிகளில் […]