மீண்டும் அரசு பள்ளிகளில் அங்கன்வாடிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . அதிமுக ஆட்சி காலத்தில் அரசு துவக்கபள்ளிகள் மற்றும் நடுநிலை பள்ளிகளில் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டது. இந்த அங்கன்வாடி மையத்தின் கட்டுப்பாடு சமூகநலத்துறை வசம் சென்றுவிட்டது என பள்ளிக்கல்வித்துறை நடப்பாண்டு தொடக்கத்தில் அரசு பள்ளிகளில் செயல்பட்டு அந்த அங்கன்வாடி மையங்களை செயல்படுத்தவில்லை. இந்நிலையில், தற்போது மீண்டும் தமிழகத்தில் அரசு துவக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலை பள்ளிகளில் மொத்தமாக செயல்பட்டு வந்த 2,381 அங்கன்வாடிகள் மீண்டும் செயல்படும் […]
அங்கன்வாடி மையங்களிலேயே எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் செயல்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 2381 அங்கன்வாடிகளை அரசு பள்ளிகளுடன் இணைத்து தொடங்கப்பட்ட எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கூறுகையில், அங்கன்வாடி மையங்களிலேயே எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் செயல்படும். அர்ப்பள்ளிகளில் செயல்பட்டு வந்த எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே தங்கள் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைங்களை […]
அங்கன்வாடி உதவியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 60 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு தமிழ்நாடு சட்டபேரவையில் சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் 07.09.2021 அன்று சத்துணவு மையங்களில் பணிபுரியும் சத்துணவு சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஆகியோரின் ஓய்வுபெறும் வயது 58-லிருந்து 60-ஆக உயர்த்தப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் உள்ள குழந்தைகள் மையங்களில் […]
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த, சோமலாபுரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த, சோமலாபுரம் அங்கன்வாடி மையத்தில், 33 குழந்தைகள் பயில்கின்றனர். இதில் 17 குழந்தைகள் இன்று அங்கன்வாடிக்கு வந்த்துள்ளனர். அங்கு மாணவர்களுக்கு கலவை சாதம் மாணவர்களுக்கு உணவாக வழங்கப்பட்டுள்ளது. இதை சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்ப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களது பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடிக்கு விரைந்த பெற்றோர்கள் குழந்தைகளை மருத்துவமனையில் அனுமதித்தனர். 10 மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் […]