லியோனல் மெஸ்ஸி அதிகாரப்பூர்வமாக அமெரிக்க கிளப்பான இண்டர் மியாமியில் இணைந்துள்ளார்.
அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து பிரபலம் லியோனல் மெஸ்ஸி, அமெரிக்காவின் இன்டர் மியாமி கால்பந்து கிளப்பில் இணைய உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது அதிகாரப்பூர்வமாக டேவிட் பெக்காமுக்கு சொந்தமான இண்டர் மியாமி கிளப்பில் இணைந்துள்ளார்.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக கிளப் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘WELCOME 10’ என்று எழுதி மெஸ்ஸி இன்டர் மியாமி ஜெர்சி அணிந்திருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளது. மேலும், சமீபத்தில் தான், லியோனல் மெஸ்ஸியின், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப் உடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
unknown nodeமெஸ்ஸி கடந்த 2021-இல் ஏழாவது முறையாக உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி’ஓர் (Ballon d Or) விருதையும் வென்றார். பின், ஆகஸ்ட் (2021-இல்) பார்சிலோனா கால்பந்து கிளப்பிலிருந்து பாரிஸ் செயிண்ட் ஜெர்மைனில்(பிஎஸ்ஜி) சேர்ந்தார். 35 வயதான மெஸ்ஸி பிஎஸ்ஜி அணிக்காக 71 போட்டிகளில் விளையாடி, அதில் 31 கோல்களை அடித்துள்ளார்.
