தோல்வியால் கடும் விரக்தி...இந்திய வீரரை தாக்கிய அமெரிக்க வீரர்!

இந்திய வீரரிடம் 3-0 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி அடைந்ததால் விரக்தியில் போட்டி முடிந்த பிறகு இந்திய குத்துச்சண்டை வீரர் நீரஜ் கோயட்டைஅமெரிக்க வீரர் அந்தோணி டெய்லர் தாக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Anthony Taylor vs Neeraj Goyat

துபாயில் நடைபெற்ற மிஸ்பிட்ஸ் பாக்ஸிங் நிகழ்ச்சியில் இந்திய குத்துச்சண்டை வீரர் நீரஜ் கோயட் அமெரிக்க வீரர் அந்தோணி டெய்லரை 3-0 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்தார். போட்டி முடிந்த பிறகு இருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.போட்டி முடிந்தவுடன் பின்னணி பகுதியில் (backstage) அந்தோணி டெய்லர் நீரஜ் கோயட்டிடம் கையுறுப்பு கொடுக்க முயன்றார்.

ஆனால், நீரஜ் கோயட் அதை மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த டெய்லர், நீரஜ் மீது தண்ணீர் பாட்டிலை வீசினார். இதைத் தொடர்ந்து இருவரும் உரத்த குரலில் தகராறு செய்தனர். இரு அணியினரும் பார்த்துக் கொண்டிருக்க, கடும் வார்த்தைகளைப் பரிமாறிக்கொண்டனர். நிலைமை மேலும் மோசமாகாமல் தடுக்க பாதுகாப்பு ஊழியர்கள் உடனடியாக தலையிட்டு இருவரையும் பிரித்தனர்.

அந்தோணி டெய்லரை பாதுகாப்பு ஊழியர்கள் அங்கிருந்து அழைத்துச் சென்றனர். ஆனால், நீரஜ் கோயட் தனது இருக்கையிலிருந்து எழுந்து டெய்லரிடம் மீண்டும் பேச முயன்றார். பாதுகாப்பு ஊழியர்கள் அவரை தடுத்து, “ரிலாக்ஸ், ரிலாக்ஸ், நீ தான் ஜெயிச்சிருக்கே” என்று சமாதானப்படுத்தினர்.இது இருவருக்கும் இடையே முதல் மோதல் இல்லை. போட்டிக்கு முன்பே டெய்லர் ஊடகவியலாளர்களிடம் பேசியபோது நீரஜ் கோயட்டின் நாட்டைப் பற்றி தவறான கருத்து தெரிவித்ததாகக் கூறி, நீரஜ் கோயட் கோபமடைந்தார்.

போட்டி முடிந்த பிறகு நீரஜ் கோயட் “இந்தியா உன் அப்பா தான்” (India tera baap hai) என்று கூறி உணர்ச்சிவசப்பட்டார்.நீரஜ் கோயட் தொழில்முறை குத்துச்சண்டையில் 19 வெற்றிகள், 4 தோல்விகள், 2 டிராக்கள் கொண்டுள்ளார். 2012 மற்றும் 2016 ஒலிம்பிக்கில் தகுதி பெற முடியாமல் போன அவர் 2013-இல் தொழில்முறை வீரரானார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.