' ரவுண்ட் நெக் ..வைட் T-ஷர்ட் .. ' பெங்களூரு வந்தடைந்தார் விராட் கோலி ..!

IPL 2024 : இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியாக நடப்பு சாம்பியன் ஆன சென்னை அணியும், பெங்களூரு அணியும் வருகிற வெள்ளிக்கிழமை அன்று சென்னை சேப்பாக்கம்

Virat Kohli Arrives RCB [file image]

IPL 2024 :இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியாக நடப்பு சாம்பியன் ஆன சென்னை அணியும், பெங்களூரு அணியும் வருகிற வெள்ளிக்கிழமை அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளது. நடைபெற போகும் இந்த ஐபிஎல் தொடருக்கு அந்தந்த அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபடஅந்தந்த அணியின் பயிற்சி முகாமில் இணைந்துகொண்டே வருகின்றனர்.

Read More :-IPL 2024 : தொடரும் சோகம் ..! சி.எஸ்.கே அணிக்கு 3-வது இடி !

அதே போல இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மானான விராட் கோலி நேற்று மாலை பெங்களூரு அணியில் இணைந்துள்ளார். அவர் அணியில் இணைந்த அந்த வீடியோவை ஆர்சிபி (RCB) அணி தங்களது X  தளத்தில் வெளியிட்டது. அந்த வீடியோவில் விராட் கோலி ‘ ரவுண்ட் நெக் காலரில், முதுகில் DAD என எழுதப்பட்ட வாக்கியத்தோடு உள்ள வெள்ளை கலர்  T-ஷர்டை ‘ அணிந்து காரில் வந்து இறங்கினார்.

பெங்களூரு அணி பயிற்சி முகாமில் இணைந்த விராட் கோலி ஒரு 30 வினாடிகள் தனது கருத்துக்களையும்  பகிர்ந்துருந்தார். அவர் அந்த வீடியோவில், “மீண்டும் கிரிக்கெட் விளையாட வந்திருப்பது மிகவும் நல்லதாக கருதிகிறேன். மேலும், பெங்களூரு அணிக்காக திரும்பி வந்திருப்பது உற்சாகமாக இருக்கிறது. பெங்களூரு அணி என்றாலே ஒரு தனி உணர்வு தான்.

Read More :-IPL 2024 : ‘ சிஎஸ்கே அணியில் இதுதான் குறை ‘ – ஆகாஷ் சோப்ரா !

இரண்டு மாதங்களாக நான் எந்த மீடியாவிலும் பேசவில்லை தற்போது, இந்த இயல்பு நிலைக்கு திரும்பியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.  மேலும், அனைத்து பெங்களூரு ரசிகர்களும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருப்பார்கள் என்று நம்புகிறேன்”, என்று பெங்களுரு அணி X தளத்தில் வெளியிட்ட வீடியோவில் அவர் கருத்துக்களை பகிர்ந்து கூறி இருந்தார். தற்போது, பெங்களூரு அணி ரசிகர்கள் இந்த T ஷர்ட் மற்றும் அவர் பேசிய வீடியோவையும் மகிழ்ச்சியாக விமர்சித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

unknown node