கொரோனாவில் இருந்து குணமடைந்தார் டிம் சீஃபர்ட்..!!

New Zealand cricketer Tim Seifert recovers from corona

கொரோனாவில் இருந்து குணமடைந்தார்  நியூசிலாந்து கிரிக்கெட் டிம் சீஃபர்ட்.

நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதி முறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக பல சினிமா பிரபலங்கள் கிரிக்கெட் வீரர்கள்  பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.

அந்த வகையில், நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சீஃபர்ட் கடந்த மே 8 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக சிகிச்சைப்பெற்று வந்த டிம் சீஃபர்ட் தற்போது பூரண குணமடைந்துள்ளார்.

அவருக்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா நெகட்டீவ் என முடிவு வந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க தற்போது கொல்கத்தா அணி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.