டெஸ்ட் அணியில் இடம்பிடித்த நடராஜன்.. மூன்றாம் டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா?

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாம் மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் 3-ஆம் டெஸ்டில் விளையாடுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இதில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது. இதனையடுத்து மூன்றாம் டெஸ்ட் போட்டி, சிட்னியில் வரும் 7 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்திய அணியில் உமேஷ் யாதவ்க்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் தொடரில் இருந்து வெளியேறினார். இதனால் அவருக்கு பதில் யாக்கர் மன்னன் நடராஜன் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இவரின் அதிரடியான பந்துவீச்சு, இந்திய அணிக்கு கூடுதலாக பலம் சேர்க்கவுள்ளது. 18 பேர் கொண்ட டெஸ்ட் தொடரில் நடராஜன் மற்றும் ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டுள்ள நிலையில், 3 ஆம் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
NEWS: T Natarajan to replace Umesh Yadav in India’s Test squad. #TeamIndia #AUSvIND
Details ???? https://t.co/JeZLOQaER3 pic.twitter.com/G9oXK5MQUE
— BCCI (@BCCI) January 1, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
February 26, 2025
AFG vs ENG: இந்த டார்கெட்டை அடிச்சு காமிங்க! சதம் விளாசி இங்கிலாந்துக்கு பெரிய இலக்கு வைத்த இப்ராஹிம்!
February 26, 2025
முதல்ல அரசியல் நாகரிகத்தை கத்துக்கோங்க! விஜய்க்கு CPI மாநில செயலாளர் முத்தரசன் அட்வைஸ்!
February 26, 2025
இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!
February 26, 2025