இரண்டாவது முறையாக கோப்பையை வென்ற பெங்களூர்...பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

சிஎஸ்கே மற்றும் எம்ஐ அணிகளுக்குப் பிறகு, தங்களது ஐபிஎல் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்ட மூன்றாவது அணியாக ஆர்சிபி சாதனையை படைத்திருக்கிறது.

Hero Image

அகமதாபாத்: நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி, தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் பட்டத்தை வெற்றிகரமாக தக்கவைத்த மூன்றாவது அணியாக ஆர்சிபி மாறியுள்ளது. இதற்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மட்டுமே இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தன.

இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி, ஆர்சிபியின் அசத்தலான பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. குஜராத் அணிக்காக வாஷிங்டன் சுந்தர் மட்டும் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்து போராடினார்.

அடுத்ததாக, 156 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ஆர்சிபி அணி எந்த கட்டத்திலும் நெருக்கடிக்கு ஆளாகாமல் வெற்றியை நோக்கி முன்னேறியது. இறுதியில் இலக்கை எளிதாக எட்டிய ஆர்சிபி, தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.

பரிசுத்தொகை எவ்வளவு?

இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணிக்கு ரூ.20 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ரூ.12.5 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. மூன்றாவது இடத்தை பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரூ.7 கோடியும், நான்காவது இடத்தை பிடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ரூ.6.5 கோடியும் வழங்கப்பட்டது.

அதேபோல் தொடரின் தனிநபர் விருதுகளுக்கும் பரிசுத் தொகைகள் அறிவிக்கப்பட்டன. வளர்ந்து வரும் சிறந்த வீரர் விருது, அதிக ரன்கள் குவித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரருக்கான ஊதா தொப்பி, சிறந்த அதிரடி ஆட்டக்காரர், அதிக டாட் பந்துகள் வீசிய வீரர், அதிக பவுண்டரிகள் அடித்த வீரர், அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் மற்றும் தொடரின் சிறந்த பிடிப்பு ஆகிய பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

மேலும் தொடரின் மிகவும் மதிப்புமிக்க வீரருக்கான விருதை வென்றவருக்கு ரூ.15 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. தொடரின் சிறந்த ஆடுகளம் மற்றும் மைதானத்திற்கான விருதுக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது.

ஐபிஎல் 2026 பரிசுத் தொகை விவரம்:

• சாம்பியன் அணி (ஆர்சிபி) – ரூ.20 கோடி
• இரண்டாம் இடம் (குஜராத் டைட்டன்ஸ்) – ரூ.12.5 கோடி
• மூன்றாம் இடம் (ராஜஸ்தான் ராயல்ஸ்) – ரூ.7 கோடி
• நான்காம் இடம் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) – ரூ.6.5 கோடி

தனிநபர் விருதுகள்:

• வளர்ந்து வரும் சிறந்த வீரர் – ரூ.10 லட்சம்
• ஆரஞ்சு தொப்பி – ரூ.10 லட்சம்
• பர்ப்பிள் கேப் – ரூ.10 லட்சம்
• சிறந்த ஸ்ட்ரைக் ரேட் – ரூ.10 லட்சம்
• மிகவும் மதிப்புமிக்க வீரர் – ரூ.15 லட்சம்
• அதிக டாட் பந்துகள் – ரூ.10 லட்சம்
• அதிக பவுண்டரிகள் – ரூ.10 லட்சம்
• அதிக சிக்ஸர்கள் – ரூ.10 லட்சம்
• சிறந்த கேட்ச் – ரூ.10 லட்சம்
• சிறந்த ஆடுகளம் மற்றும் மைதானம் – ரூ.50 லட்சம்