கொரோனா பாதிப்பால் பியூஷ் சாவ்லா தந்தை காலமானார்..!!

Piyush Chawla's father dies of corona virus infection

கொரோனா வைரஸ்  பாதிப்பால் பியூஷ் சாவ்லா தந்தை காலமானார்.

நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கிரிக்கெட் வீரர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பலர் குணமடைந்து இறந்து வருகின்றார்கள் அந்த வகையில், இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் மற்றும் ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த பியூஷ் சாவ்லாவின் தந்தை தந்தை பிரமோத் குமார் கொரோனா தொற்று பாதிப்பால்  உயிரிழந்தார்.

பிரமோத் குமாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பியூஷ் சாவ்லா ஒரு பதிவு ஒன்றை வெளிட்டுள்ளார்.

unknown node