முதல் நாள் ரசிகரின் தலையில் போட்ட ஆட்டோகிராப் ! 3-வது நாளும் ஆட்டோகிராப்புடன் வந்த ரசிகர்

வேகப்பந்து வீச்சாளர் ஜேமிசன் போட்டியின் போது ரசிகர் ஒருவரின் தலையில் போட்டுள்ள ஆட்டோகிராப் வீடியோ வைரலாகி வருகின்றது.
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. தொடரின் இரண்டாவது போட்டி கிறிஸ்ட்சர்ச்சின் ஹெகல் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கையில் ஜேமிசன் பாகிஸ்தானின் முதல் இன்னிங்சின் போது ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியின் போது, ஒரு ரசிகர் ஜேமிசனிடம் ஆட்டோகிராஃப் கேட்ட நிலையில், அதன் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
போட்டியின் முதல் நாளில், கைல் ஜேமிசன் பவுண்டரி எல்லைக்கு அருகே நின்றுக் கொண்டிருந்தபோது, ஒரு ரசிகர் அவரது மண்டையில் ஆட்டோகிராப் போடுமாறு கேட்டுள்ளார்.உடனே ஜேமிசன் மார்க்கரை வைத்து ரசிகரின் தலையில் ஆட்டோகிராப் போட்டுள்ளார்.இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால்,இந்த போட்டியின் மூன்றாம் நாளில் ரசிகர் மைதானத்திற்கு வந்துள்ளார்.ஆனால் வேறு உடையுடனும், கூலிங் கிளாஸ் அணிதிருந்தும் வந்திருந்தார்.குறிப்பாக அவரது தலையில் ஜேமிசனின் ஆட்டோகிராப் மூன்றாவது நாளாகவும் இருந்துள்ளது.இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது
Striped singlet to striped blazer but the signature remains for this Kyle Jamieson fan! Sharp spotting from the @sparknzsport team and @sumostevenson #NZvPAK pic.twitter.com/t0ofTugSQC
— BLACKCAPS (@BLACKCAPS) January 5, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025