புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த மும்பை இந்தியன்ஸ்..!!

It topped the standings by winning yesterday’s match

நேற்று நடந்த போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் புள்ளிபட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சென்னை சேப்பாக் மைதானத்தில் மோதியது இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

அதன்படி மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் அடித்தது. அடுத்ததாக 151 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நோக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி 19.4 ஓவர்களில் தனது அணைத்து விக்கெட்களையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்து. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிபட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதுவரை 3 போட்டிகள் விளையாடி 2 போட்டிகளில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது . அடுத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2 போட்டிகள் விளையாடி இரண்டு போட்டிகளும் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

மூன்றாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நான்காவது இடத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐந்தாவது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், ஆறாவது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஏழாவது இடத்தில் பஞ்சாப் கிங்ஸ், எட்டாவது இடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் உள்ளது.