ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
எனவே, இதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹைதராபாத் அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டியது என்று சொல்லவேண்டும். தொடக்க வீரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா இருவரும் பந்துவீச்சாளர்களை சிதறடித்து வேகமாக ரன்கள் சேர்த்தனர். இருவரும் சேர்ந்து 82 ரன்கள் கூட்டணி அமைத்து அணிக்கு சூப்பர் ஆரம்பத்தை கொடுத்தனர்.
டிராவிஸ் ஹெட் 21 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அபிஷேக் ஷர்மா 48 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்தார்.
அவர்களுக்கு அடுத்ததாக களத்திற்கு வந்த ஹெய்ன்ரிச் கிளாசன் அணியின் ரன் வேகத்தை குறைக்காமல் 52 ரன்கள் எடுத்து முக்கிய பங்கு வகித்தார். நிதிஷ் குமார் ரெட்டி 24 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து அணிக்கு கூடுதல் பலம் சேர்த்தார். இறுதியில் விக்கெட்களை இழந்தாலும், 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்தது.
அடுத்ததாக 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கம் முதலே தடுமாறியது என்று தான் சொல்லவேண்டும். இருப்பினும், பின் ஆலன் 7 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார்.
அவருக்கு அடுத்ததாக ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி 29 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அணியை நிலைநிறுத்த முயன்றார். ரிங்கு சிங் 35 ரன்கள் எடுத்தும், தொடர்ந்து விக்கெட்கள் விழுந்ததால் அணிக்கு தேவையான கூட்டணி அமைக்க முடியவில்லை. இதனால், 16 ஓவர்களில் 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்த கொல்கத்தா அணி, 65 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இதை செய்திருந்தால் கன்பார்ம் வெற்றி
இந்த போட்டியில் கொல்கத்தா அணி ஆரம்பத்தில் நல்ல அதிரடி காட்டி போட்டியை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. குறிப்பாக பின் ஆலன் கொடுத்த வேகமான தொடக்கம் அணிக்கு பெரிய நம்பிக்கை கொடுத்தது.
ஆனால், அந்த ஆரம்ப momentum-ஐ தொடர்ந்து கொண்டு செல்லாமல், தேவையில்லாத shot selection காரணமாக தொடர்ந்து விக்கெட்களை இழந்தது தான் அவர்களின் பெரிய தவறாக அமைந்தது என்று சொல்லவேண்டும்.
மேலும், நடுப்பகுதியில் ஒரு நல்ல partnership அமைத்திருந்தால் போட்டி முழுவதும் மாற்றமடைந்திருக்கும். குறிப்பாக ரகுவன்ஷி மற்றும் ரிங்கு சிங் இடையே நீண்ட நேர கூட்டணி அமைந்திருக்கவில்லை என்பதும் தோல்விக்கு முக்கிய காரணம்.
அதுமட்டுமல்லாமல், ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடிய பின்னர் கொஞ்சம் நிதானமாக ரன் சேர்த்து இன்னிங்ஸை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால், இந்த 227 ரன்கள் என்ற இலக்கையும் எளிதாக எட்டியிருக்கலாம். மொத்தத்தில், விக்கெட்களை காப்பாற்றி, சரியான பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால், இந்த போட்டியை கொல்கத்தா அணி கண்டிப்பாக வெற்றி பெற்றிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
