இன்று பெங்களூர் – ராஜஸ்தான் அணிகள் மோதல்..!! முதலிடத்தை பிடிக்குமா RCB..??
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இன்றயை ஐபிஎல் போட்டியில் பெங்களூர் – ராஜஸ்தான் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளது.
ஐபிஎல் தொடரின் 16- வது லீக் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த இரண்டு அணிகளும் இதுவரை 23 போட்டிகள் நேருக்கு நேராக மோதியதில் 10 முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், 10 முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளது. 3போட்டிகள் சமநிலையில் முடிந்துள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 3 போட்டிகள் விளையாடி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று மிகவும் வலுவான அணியாக புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்று நடக்கும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் புல்லிபட்டியலில் சென்னையை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்து விடும் என்று கூறப்படுகிறது.
அதைபோல் நடப்பாண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 போட்டிகள் விளையாடி 2 போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளி விவரப்பட்டியலில் முன்னுக்கு செல்லும் நோக்கத்துடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள். மேலும் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
லேட்டஸ்ட் செய்திகள்
தவெக சிறப்பு ஆலோசகர் ஆகிறாரா பிரசாந்த் கிஷோர்? விஜய்யுடன் 2.30 மணி நேரம் சந்திப்பு!
February 10, 2025![vijay prashant kishor](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/vijay-prashant-kishor.webp)
கலகலன்னு கலக்கும் ப்ரதீப் ரங்கநாதனின் ‘ட்ராகன்’ ட்ரெய்லர்.!
February 10, 2025![Dragon Trailer](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Dragon-Trailer.webp)
NZ vs SA : சதமடித்து எதிரணியை மிரளவிட்ட கேன் மாம்ஸ்… நியூசிலாந்து அணி திரில் வெற்றி.!
February 10, 2025![Kane Williamson](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Kane-Williamson-.webp)
2வது ஒருநாள் போட்டியில் லைட் எரியாததால் வெடித்தது பிரச்சனை! OCA-வுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஒடிசா அரசு.!
February 10, 2025![ind vs eng floodlight failure](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ind-vs-eng-floodlight-failure.webp)
கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்!
February 10, 2025![Jallikattu - Madurai](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Jallikattu-Madurai-.webp)