இன்று பெங்களூர் – கொல்கத்தா அணிகள் மோதல்..!! ஹாட்ரிக் வெற்றி பெறுமா RCB…??

Default Image

இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. 

ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் மதியம் 3.30 மணிக்கு சென்னை சேப்பாக் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த இரண்டு அணிகளும் இதுவரை நேருக்கு நேராக  26 போட்டிகள் மோதியதில் 12 முறை பெங்களூர் அணியும், 14 முறை கொல்கத்தா அணியும் வெற்றி பெற்றுள்ளது.

இதைபோல் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது, 2 போட்டிகள் விளையாடி இரண்டிலுமே வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில்  உள்ளது. இன்று நடைபெறவுள்ள போட்டியிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக்  வெற்றியை பதிவு செய்யும் நோக்கத்துடன் வலைப்பயிற்சியில் பெங்களூர் அணி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.

மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 2 போட்டிகள் விளையாடி 1 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது. மேலும் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்